மோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, பாகிஸ்தான்

எப்போதும் இந்தியா அமெரிக்காவுடன் ஒருநல்ல நட்புறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்ற உலகநாடுகள் எப்போதும் இந்தியா மீது சற்று பயம்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதோடு இந்தியாவை பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையிலும் ஒருமிகப்பெரிய செல்வாக்குமிக்க நாடாகவே திகழ்ந்துவருகிறது. அதிலும் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக முதன் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு பெற்றுக் கொண்ட நாளிலிருந்து இந்தியாவின்செல்வாக்கு உலக அரங்கில் உயர்ந்து கொண்டேவருகிறது என்றால் அது மிகையாகாது.

அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இந்தியாவிற்குஉண்டு என்பதற்கு சாட்சியாக பலகாரணங்கள் இருந்திருக்கின்றன. ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோதும் சரி, அதன் பிறகு பராக் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பின்னரும் சரி, இந்தியா அமெரிக்காவுடன் மிகநெருக்கத்துடன் இருந்து வருகிறது.

அதிலும் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தசமயத்தில் இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார் என்பதுதான் உண்மை அவர் இருந்த சமயத்தில் அமெரிக்காவாழ் இந்தியர்களுக்கு அங்கே தனிசெல்வாக்கு இருந்தது என்று சொல்கிறார்கள். அதன்பிறகு டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று கொண்டபிறகு அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே இருந்த நட்புறவு சற்றுசுணக்கம் ஏற்பட்டதாக ஒருதோற்றம் உண்டானது.

ஆனால் அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டதும், அதேபோல டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகைதந்ததும் என இரண்டுபயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

அதிலும் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக பொறுப் பேற்று 5 ஆண்டுகள் முடிவுற்ற பின்னர் அவருக்கு விடை பெறும் விழா நடைபெற்ற சமயத்தில் அங்கு இருந்த இந்தியர்கள் உட்படஅனைவரும் மீண்டும் ஒருமுறை தாங்களே அதிபராக இருங்கள் என்று அவரிடம் மன்றாடியது உலக நாடுகளையே வியக்க வைத்தது.

இந்த நிலையில், இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் இல்லாதளவில் தற்சமயம் அதிக நெருக்கம் காட்டிவருகிறது.  பல சமயங்களில் இரண்டு தலைவர்களும் தொலைபேசியில் மட்டுமே உரையாடினார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் 24ஆம்தேதி வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில்சந்திக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, உள்ளிட்ட நான்குநாடுகள் ஒன்றிணைத்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். அவர் தீவிரமாகஇருந்த காலகட்டத்தில் சீனாவிற்கு எதிராக இந்த அமைப்பு மிகதீவிரமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்,குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் எதிர்வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த உச்சிமாநாட்டில் உலகளவில் சர்வதேச நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் இந்தோ பசுபிக்விவகாரம் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்ற பல முக்கிய விவகாரங்களில் விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்தசூழ்நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்ப இருக்கின்றார். இதற்கான அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களை சந்தித்து உரையாற்ற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியா பிரதமர், ஜப்பான் பிரதமர் சுகாஉள்ளிட்டோரை சந்தித்து நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அதேபோல தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தான் விவகாரம் அதிகரித்து வரும் தொழில் நுட்பங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு கூட்டாண்மை, கடல்சார் பாதுகாப்பு கல்விபருவநிலை மாற்றம், என்று பல விஷயங்கள் தொடர்பாக தலைவர்கள் கருத்துபரிமாறிக் கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க உறவுகள் தொடர்பாகவும் ஆப்கானிஸ் தான் நிலவரம் தொடர்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதோடு மாநாட்டை அடுத்து 25ஆம் தேதி ஐநா பொதுச்சபை 76 ஆவது அமர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 100 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதோடு ஐநா சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்தகூட்டத்தில் வலியுறுத்தி உரையாற்றுவார் என்று சொல்லப்படுகிறது. நரேந்திர மோடி ஜோ பைடன் உள்ளே இருப்பது இந்தியாவின் எதிரிநாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...