மத்திய அரசின் ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன்நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டு மக்களின் உடல்நலத்தில் கவனம்செலுத்துவது மட்டுமல்லாமல், அனைவருக்கும் அதை சமமானதாக மாற்றுவதிலும் கவனம்செலுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உலக அளவில் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும், சர்வதேசபாரம்பரிய மருத்துவ மையத்தை உலக சுகாதார நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கரோனாதொற்று பரவிய போது, தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவஉதவி, ஆலோசனைகள் கிடைக்கும் வகையில், டெலிமெடிசின்உட்பட பலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பத்தை மருத்துவ பயன்பாட்டுக்காக மேம்படுத்த வேண்டும். நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதாரத்துறையை சீர்திருத்தம்செய்து மக்களுக்கு முழு அளவில் பயன்தரும் வகையில் மேம்படுத்தி வருகிறோம்.

தற்காலத்துக்கு ஏற்றவகையில், மருத்துவ அறிவியல் சார்ந்த உட்கட்டமைப்புகள் மேம்படுத்தல், மனிதவளம், ஆயுஷ் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தல் போன்றவற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ வசதிகிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வட்டார, மாவட்டஅளவில் கிராமங்களுக்கு அருகில் தீவிர சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதை செயல்படுத்த தனியார் துறையினரும் மற்ற துறையினரும் முன்வரவேண்டும்.

மருத்துவ சேவைக்கு தேவை அதிகரித்துவருவதை கருதி, மருத்துவ நிபுணர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சித்து வருகிறோம். மருத்துவக்கல்வி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அதிகநிதி ஒதுக்கப் படுகிறது. ‘கோவின்’ மற்றும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்மிஷன்’ ஆகிய திட்டங்கள், நுகர்வோர் – சுகாதார துறையில் சேவை வழங்குவோர் என இருதரப்பினரும் எளிதாக தொடர்பு கொள்வதற்கு வழி வகுத்துள்ளது. இதன்மூலம் மக்கள் எளிதாக சிகிச்சை பெறவும் மருத்துவதுறையினர் எளிதாக சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிலமாநிலங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 இலக்க சுகாதாரஎண் (ஹெல்த் ஐ.டி.) வழங்கப்படும். இதை ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் இதற்கான இணையதளத்தில் பதிவுசெய்து சுகாதார அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த எண் மூலம் ஒருவரின் மருத்துவ தகவல்களை ஆண்டுகணக்கில் பாதுகாக்க பயன்படும்.

இதன்மூலம் என்னென்ன பிரச்சினைகளுக்கு என்னென்ன சிகிச்சை எப்போதெல்லாம் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம். இவற்றின் மூலம் எங்கு சென்றாலும், இந்த தகவல்களை இணையதளத்தில் பார்த்து எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதாக சிகிச்சை பெறமுடியும். பழைய மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்களை பாதுகாக்கவோ அல்லது ஒவ்வொருமுறை சிகிச்சை பெறும்போது எடுத்துச் செல்லவோ தேவை இருக்காது. தற்போது இத்திட்டத்தை நாடுமுழுவதும் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரத்துக்கான கேபினட்கமிட்டி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை நாடுமுழுவதும் அமல்படுத்த, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது. இத்திட்டம் ரூ.1,600 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இதை தேசியசுகாதார ஆணையம் அமல்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...