ஆசியாவின் 2-வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் கட்டப்பட்ட ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலாகும்.

பிறகு, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இஷ்கானின் முயற்சியால், ஆன்மிகம் மற்றும் அறிவுமிக்க மண்ணில் ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவில் திறக்கப்பட்டது. இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்தக் கோவில், நாட்டின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக திகழும் என்று நம்புகிறேன். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பக்தர்களை தொடர்புபடுத்துவதே இதன் நோக்கமாகும். மஹாராஷ்டிரா மக்களுக்காக இந்த சிறப்புமிக்க பணிகளைச் செய்த இஸ்கான் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற இந்த அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வீட்டுக்கு வீடு கழிப்பறை, ஏழைகளுக்கு காஸ் இணைப்பு, குடிநீர் வசதி, ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை அரசு செய்து வருகிறது, எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...