மக்கள்நல திட்டங்களுக்கான நிதியில் இருந்து திமுக குடும்பம் கொள்ளை அடித்தபணம் மீட்கப்பட்டு தமிழக மக்களுக்காக செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் எனக்கு சக்திகிடைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு மிகப்பழமையானது. நீங்கள் என் மீது பொழியும் அன்பும்கூட மிகவும் பழமையானது.
ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகத்திற்கு வரும்போது, இங்குள்ள சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. இதற்கு காரணம், பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்துவலுவடைந்து வருவதுதான். சென்னையில் இதை தெளிவாக பார்க்கிறேன். பல திட்டங்களின் தொகையை எனதுஅரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்பி விடுகிறது.
வளர்ச்சிஅடைந்த பாரதத்தின் கூடவே, வளர்ச்சி அடைந்த தமிழகத்திற்கான உறுதிபாட்டை, நான் மேற்கொண்டுள்ளேன். நாம் மிகவிரைவாக பாரதத்தை, உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றவேண்டும். இதில், தமிழகத்தின் பங்களிப்பு மிகப்பெரியது.
சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக, நம்அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது. சென்னையில் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற கட்டமைப்பு திட்டப் பணிகள் நிறைவேற்றப் படுகின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், குடி நீர், கழிவு நீர் மேலாண்மைக்கான ‘அம்ருத்’ திட்டம், சென்னை மெட்ரோரயில் திட்டம், சென்னை விமான நிலைய விரிவ ாக்க திட்டம் என, சென்னை மக்கள் மேம்பாடு அடைவதற்காக, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயலுக்கும் இடையில் மேம்பாலம் கட்ட, ஆயிரக்கணக்கான கோடிரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு, ஒருபுறம் தமிழகம் மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறது. மறுபுறம், மாநிலத்தில் அதிகாரத்தில்இருக்கும் தி.மு.க., அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களின் கனவுகளை கண்டுகொள்ளவில்லை.சிலகாலம் முன்பு மிகப்பெரிய புயல் வந்தது. சென்னை மக்களுக்கு ஏகப்பட்ட துயரம் உண்டானது. தி.மு.க., அரசு அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவர்கள்துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் வேலைகளை செய்திருக்கிறது.
தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், வெள்ள மேலாண்மை செய்யவில்லை. மாறாக ஊடக மேலாண்மையை செய்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்து விட்டது. பாலும், தேனும் ஓடுவதாக, ஊடகங்களில் கூறுகின்றனர். தி.மு.க., அரசுக்கு மக்களின்துயரம் குறித்து, அக்கறை இல்லை. தமிழகம் குறித்தும் அக்கறைஇல்லை. மத்திய அரசு, ஏழைகள் நலனை கருத்தில்வைத்து செயல்படும் மக்கள் அரசு. கொரோனா காலத்தில், ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கினோம். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க செய்தோம்.
தமிழகம் குறு, சிறு, நடுத்தரதொழில் துறையில் முன்னணி மாநிலம். அந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, நம் அரசு ஆயிரக்கணக்கான கோடிரூபாய் கடன் அளித்தது. மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக கச்சை கட்டிக் கொண்டு பணியாற்றுகிறது.
குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்களுடைய எதிர் காலம் குறித்து மட்டும் சிந்திக்கின்றன. ஆனால், நான் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயல் படுகிறேன். குடும்ப கட்சிகள் ஆட்சிசெய்த காலத்தில், 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை. இரண்டரை கோடி குடும்பங்கள் வீட்டில் இருள்சூழ்ந்திருந்தது.நம் அரசு எரிசக்தி பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து, அந்ததிசையில் செயல்படுகிறது. தற்போது கல்பாக்கத்தில் இருந்து வந்தேன். நம்நாடு, எரிசக்தியில் தற்சார்பு அடையும் வகையில், மிகப்பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. கல்பாக்கத்தில் மின்உற்பத்திக்காக, வரலாற்று சிறப்புமிக்க அணு உலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அணுசக்தி மையத்தில், ‘கோர் லோடிங்’ துவங்கி உள்ளது. சிலகாலத்தில் மின் உற்பத்தி துவக்கப்பட்டுவிடும். அப்போது, இந்த தொழில்நுட்பம் பெற்ற நாடுகளில், பாரதம் இரண்டாவது நாடாகிவிடும். எரிசக்தி தேவைகளை நிறைவுசெய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம். தெலுங்கானாவில் 1,600 மெகாவாட்; ஜார்கண்டில் 1,300 மெகாவாட் அனல்மின் நிலையங்கள்; உத்தரப் பிரதேசத்தில் 300 மெகாவாட் சூரிய மின் சக்தி நிலையம்; 1,600 மெகாவாட் அனல் மின்நிலையம்; ராஜஸ்தானில் சூரிய சக்தி ஆலைகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் ராய்ப்பூரில் எத்தனால் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நொய்டாவில் கழிவுநீர் சத்திகரிப்பு ஆலையிலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திபணி துவக்கப் பட்டுள்ளது; இவையெல்லாம், கடந்த சிலநாட்களில் செய்யப்பட்டவை.மத்திய அரசு, ஒருகோடி குடும்பங்களுக்கு மின்சக்தி அளிக்கும் சூரியசக்தி திட்டத்தை துவக்கி உள்ளது. இனி வீடுகளுக்கு மின் கட்டணம் இருக்காது. வீட்டில் சூரியசக்தி உபகரணங்களை பொருத்தினால் போதும்; மின்சாரம் இலவசமாக கிடைக்கும். உபரி மின்சாரத்தை, அரசு வாங்கிக் கொள்ளும். இந்ததிட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் மின் சக்தி துறையில் பாரதத்தை தன்னிறைவு அடையசெய்யும். இதில், தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கும். இலவச மின்சாரம்; கட்டணம் பூஜ்ஜியம்.
என்மனதை அரிக்கும் கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தை சேர்ந்தபெற்றோர் மனதிலும், அந்தகவலை உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழகத்தில் போதைப்பொருட்கள் தடையின்றி, அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பதுதான் என் மனதை உருக்கும் கவலை. உங்கள் குழந்தைகள் குறித்த கவலை, என்னையும் அரிக்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கநினைக்கும் கட்சி குறித்து, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் மட்டுமல்ல, நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும்.
இதுஅபாயத்தின் அறிகுறி. தமிழகத்தின் எதிரிகள் மீதான நடவடிக்கை, மேலும் விரைவுப் படுத்தப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம். வளர்ச்சிஅடைந்த தமிழகத்திற்காக, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வளர்ச்சிஅடைந்த தமிழகம் ஏற்படும்போதுதான், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் பாதைவலுவடையும். நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம். நீங்கள் எனக்கு ஆசிவழங்க வந்துள்ளீர்கள். டில்லியில் ‘ஏசி’ அறையில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, இந்தகாட்சியை பார்த்து, தமிழகம் பா.ஜ.,வில் இணைந்துவிட்டது என நடுங்கிபோவர்
காங்கிரஸ் மற்றும் ‘இண்டியா’ கூட்டணிகட்சிகள், குடும்பத்துக்கு முதல் உரிமை கொடுக்கின்றன. நான் நாட்டுக்கே முதல்உரிமை என்கிறேன். ‘இண்டியா’ கூட்டணியை சேர்ந்தவர்கள், என்னை வசைபாட, புதியபார்முலாவை கண்டுபிடித்துள்ளனர். ‘மோடிக்கு குடும்பம்இல்லை. அதனால் இப்படி பேசுகிறார்’ என்கின்றனர்.எனக்கு 16 வயதானபோது, வீட்டைதுறந்து நாட்டிற்காக வெளியேறினேன். நீங்கள்தான் என்குடும்பம். பாரத நாட்டின் மக்கள்தான் என் குடும்பத்தார். நாட்டின் இளைஞர்கள் என் குடும்பத்து மக்கள். அதனால்தான் அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக்க, இரவு, பகலாக கடுமையாக உழைக்கிறேன்.
நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க, நான் பணியாற்றி வருகிறேன். நாட்டின் விவசாயிகள், ஏழைகள்தான் என்குடும்ப சொந்தங்கள். அவர்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்க, என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். பாரதமே என்னுடைய குடும்பம். அதனால் நாடுமுழுதும், ஒரே குரலெடுத்து, ‘நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்’ என்கிறது. காங்கிரஸ், தி.மு.க., மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள், ஊழலில் ஊறிப் போய் உள்ளன.
அவர்களுக்கு அவர்களின் குடும்பம் தான் எல்லாம். ஊழல்தான் அனைத்தும். பல தசாப்தங்களாக, இப்படிப்பட்ட அரசியலை செய்து பழகிவிட்டன. இதன் காரணமாக, தேசிய இளைஞர்கள், அரசியல்மீது வெறுப்படைந்துள்ளனர்.
பல லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிகணக்கிற்கு நேரடியாக செல்வதுதான், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சி திட்டங்களில் வழக்கம்போல கோடிகோடியாக கொள்ளை அடிக்க முடியாமல் போனதுதான் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும்சிக்கல். இந்த விஷயத்தில் ஒரு குடும்பம் மொத்தமுமே, பயங்கர எரிச்சலில் உள்ளது. பணம் கிடைக்காததால், அதை நாங்கள் செய்தோம் என, தம்பட்டம் அடித்து கொள்கிறது. அதிலும் அவர்களுக்கு வெற்றிகிடைக்கவில்லை.
நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்… தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்தியஅரசு வழங்கும் பணத்தை நீங்கள் கொள்ளை அடிக்க இந்தமோடி விடமாட்டார். இதுவரை கொள்ளை அடித்தபணம் மீட்கப்பட்டு, தமிழக மக்களுக்காகவே செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
..
குடும்ப அரசியல் என்பது மக்கள்விரோத அணுகுமுறை. அதில் மற்றவர்களை துச்சமாக கருதும் அகங்காரம், ஆணவம் தலைவிரித்து ஆடுகிறது. இங்குள்ள குடும்பஅரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர், அதிகாரத்தின் முக்கியபதவியை பெற்ற உடனே நாட்டையும், நாட்டு மக்களையும் அடிமையாக கருதி பேசிவருகிறார். அரசியல் சாசனத்தின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு மாறாகவும், தான் வகிக்கும் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை மறந்தும் பேசுகிறாார்; அதற்கு எழுகின்ற இயல்பான எதிர்ப்பை விளையாட்டாக கடந்து போகிறார்.
நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டே அந்த அமைச்சரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பிஉள்ளது. கோடானு கோடி மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, காலில்போட்டு மிதித்து அவமானப்படுத்துவதுதான் குடும்ப அரசியல் நடத்துபவரின் அடையாளம். அதிகாரம், மமதைகாரணமாக மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத ஒருவர், தமிழக அரசின் முக்கிய பதவியில் நீடிப்பது கவலை அளிக்கும் விஷயம்.
பிரதமர் நரேந்திர மோடி
சென்னை பொது கூட்டத்தில் பேசியது.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |