சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடேட் நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் ஜிதேந்திர சிங்க் பங்கேற்பு

காசியாபாதில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (சிஇஎல்) நிறுவனத்தின் பொன்விழாக்கொண்டாட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று  (26.06.2024) பங்கேற்றார்.

50 ஆண்டுகளை இந்நிறுவனம் நிறைவு செய்வதற்கு வாழ்த்துதெரிவித்த அவர், இந்த நிறுவனத்திற்கு “மினி ரத்னா” அந்தஸ்து   வழங்கப்படுவதாகக் கூறினார். பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனம் மேலும் பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். 50 ஆண்டுகால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் வெற்றி ஆகியவற்றை இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி ஸ்திரத்தன்மை, லாபம் ஆகியவை புதிய உயரங்களைத் தொட்டுள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக இருந்த சிஇஎல் நிறுவனம் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ளது என்றும், தொடர்ந்து 3-வது ஆண்டாக சிஇஎல் நிறுவனம் மத்திய அரசுக்கு ஈவுத்தொகையை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...