நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் கூறியுள்ளா

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய   அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தித் துறையின் 100 நாள் செயல்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று  (25.06.2024) புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்ததுடன் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், அணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

கதிரியக்க மருந்துகள் மற்றும் அணுசக்தி மருத்துவம், ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கதிரியக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்கு வழிவகுக்கும் என்றும்   டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறை செயலாளருமான டாக்டர் அஜித்குமார் மொகந்தி மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...