அவமரியாதையாக நடத்தினால் மத்திய_அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ்பெறுவோம் என மேற்கு வங்க முதல்வவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .
தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் கூட்டாக போட்டியிட்டோம். அந்த வகையில் நான் கூட்டணி தர்மத்தை காப்பாற்றவே விரும்புகிறேன். அதேநேரத்தில்
எங்களை அவமரியாதையாக நடத்தினால் அதை சகித்துகொள்ள முடியாது. மரியாதை இருக்கும் வரை தான் மத்திய அரசில் நீடிப்போம்.
ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் சரக்குகட்டணத்தில் 20 சதவீதம் வரை உயர்த்தினார்கள். அந்த தகவல் வேறொருவர் மூலம் தான் எனக்குத்தெரியும். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக என்னிடம் தெரிவிக்கவேண்டிய அவசிய மில்லை. ஆனால் பயணக்கட்டண உயர்வு குறித்தாவது_என்னிடம் தெரிவித்திருக்கலாமே.
யார் பிரதமர் என்பதை சோனியாகாந்திதான் முடிவுசெய்கிறார். அதைபோன்று யாரை ரயில்வே அமைச்சராக்குவது என்பதை முடிவுசெய்யும் உரிமை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார் .
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.