பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் விரைவான விசாரணை-மோடி வலியுறுத்தல்

கோல்கட்டா பயிற்சி பெண்டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், “பெண்களுக்கு எதிரானவன்முறை வழக்குகளில் மிக விரைவான விசாரணை நடத்தி, உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கமாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர, பெண்களுக்கு எதிரானவன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும்விவாதம் நடந்து வருகிறது.

‘பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாகவிசாரித்து, கடுமையான தண்டனை வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும்’ என, மேற்கு வங்கமுதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே உள்ள சட்டங்களே, இந்தப்பிரச்னையில் மிகவும் கடுமையாக உள்ளதாகவும், அந்தச் சட்டங்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றவேண்டும் என்றும், மத்திய அரசு தரப்பில் பதில் மனு அனுப்பப்பட்டது.

பெண்கள் பாதுகாப்புவிவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும், சிலநிகழ்ச்சிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின், 75வது ஆண்டையொட்டி, மாவட்டநீதித்துறை மாநாடு நடத்தப்படுகிறது. இதை டில்லியில் நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நீதித்துறையின் வளர்ச்சி மற்றும் வசதிக்காக பலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் நீதித்துறையின் விரைவானவிசாரணைக்கு பெரிதும் உதவுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...