இன்று அகில இந்திய வானொலியில் தனது மன் கிபாத் நிகழ்ச்சியில் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய மோடி, பெண்கள் பல்வேறுதுறைகளில் புதிய உயரங்களை எட்டுவதாகவும் கூறினார். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள பெண்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி இன்று பாராட்டினார். மார்ச் 8 ஆம் தேதி நாடுமுழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும். திருமணத்திற்கான பொதுவானவயதை நிர்ணயிப்பதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைவழங்க நாடு முயற்சித்து வருவதாக மோடி கூறினார்.
‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் வெற்றியால் நாட்டில் பாலினவிகிதம் மாறியுள்ளது. பள்ளிசெல்லும் பெண்களின் எண்ணிக்கையும் மேம்பட்டுள்ளது. ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின்கீழ் பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுதலை பெற்றதாகவும் கூறினார். முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, நாட்டில் முத்தலாக் முறை 80 சதவீதம் குறைந்துள்ளது.
பெண்களே இப்போது மாற்றத்தை முன்னெடுத்து செல்வதால் தான் இந்தமாற்றங்கள் எல்லாம் நிகழ்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |