ஒரு வாரத்தில் 1034 ஓய்வூதியர்களின் குறைகள் தீர்க்கப்பட்டது

குடும்ப ஓய்வூதியர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குவதற்காக’ குடும்ப ஓய்வூதியக் குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மாத கால இயக்கத்தை மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 2024 ஜூலை 1 முதல் 31 வரை நடத்துகிறது. இந்த இயக்கத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஜூலை 1 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு இயக்கத்தையொட்டி 1891 புகார்கள் பெறப்பட்டன. இவை ஓய்வூதியதாரர்களை உள்ளடக்கிய 46 அமைச்சகங்கள், துறைகள் தொடர்பானவையாகும்.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் 04.07.2024 நிலவரப்படி 1891 புகார்களில் 1034 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 857 ஆகக் குறைந்துள்ளது.  பாதுகாப்புத் துறை, நிதித் துறை, ரயில்வே அமைச்சகம் ஆகியவை, ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு தொடர்பான சிறந்த செயல்பாடுகளில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...