தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 90.76 சுய உதவிக்குழுக்களாக ஒருகிணைத்துள்ளது

கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊரக வாழ்வாதாரத் துறை கூடுதல் செயலாளர் சரண்ஜித் சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

புதுதில்லியில் நேற்று (11.07.2024) நடைபெற்ற வறுமை ஒழிப்பு குறித்த மாநாட்டில் சரண்ஜித் சிங் பேசினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

ஏழைப்பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை களைய  வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறினார். இத்தகைய சவால்களை அடையாளம் கண்டு தீர்க்கவும் உள்ளூர் நிலைகள் குறித்த புரிதல் இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார். தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மேற்கொள்ளும் புதுமையான நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். வறுமையை ஒழித்து கடைசிநிலையில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன்கள் சென்றடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 10.04 கோடி பெண்களை                                90.76 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக திரட்டியுள்ளது என்று சரண்ஜித் சிங் தெரிவித்தார். இது நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் கல்வியறிவு, நிலையான வாழ்வாதாரங்கள், சமூக மேம்பாட்டு அம்சங்களை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். தீனதயாள் அந்தியோதயா திட்ட  தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சமாக மகளிருக்கான வாழ்வாதார மேம்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...