சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து பணிகளும் முழுமை பெற்றுவிட்டன. இன்னும் தமிழகப் பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன. இதுதொடர்பாக எதிர்பார்ப்பு நீடித்து வரும் நிலையில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்கின்றனர். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், மொத்தம் 261.70 கிலோமீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில் தமிழகத்தில் மட்டும் 105.70 கிலோமீட்டர் தூரம் இடம்பெற்றுள்ளது. இதற்காக 7,525 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

எந்தளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன என்று பார்த்தால் குடிபாலா – வாலாஜாபேட்டை இடையிலான 24 கிலோமீட்டரில் 72 சதவீதம், வாலாஜாபேட்டை – அரக்கோணம் இடையிலான 24.5 கிலோமீட்டரில் 86 சதவீதம், அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையிலான 25.5 கிலோமீட்டரில் 52 சதவீதம், காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான 32.1 கிலோமீட்டரில் 65 சதவீதம் எனப் பணிகள் முடிந்துள்ளன.

இதில் குடிபாலா – வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை – அரக்கோணம், அரக்கோணம் – காஞ்சிபுரம் ஆகியவற்றின் பணிகள் மார்ச் 2025ல் முடிவடையும். காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் ஜூலை 2025ல் நிறைவு பெறும். இருங்காட்டுக்கோட்டை ட்ரம்பட் இண்டர்சேஞ்ச் சாலை ஆகஸ்ட் 2025ல் முடிவடையும். இதில் குடிபாலா – வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை – அரக்கோணம், அரக்கோணம் – காஞ்சிபுரம் ஆகியவற்றின் பணிகள் மார்ச் 2025ல் முடிவடையும். காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் ஜூலை 2025ல் நிறைவு பெறும். இருங்காட்டுக்கோட்டை ட்ரம்பட் இண்டர்சேஞ்ச் சாலை ஆகஸ்ட் 2025ல் முடிவடையும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...