இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி

அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு விவகாரம், நம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்க வைத்துஉள்ளது.

அதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு, ஹிண்டன்பர்க் அறிக்கை உட்பட, நம் பார்லி., கூட்டத் தொடருக்கு முன் இதுபோன்ற அறிக்கைகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய சதி இருப்பதாக, பா.ஜ., — எம்.பி.,க்கள் பார்லிமென்டில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ அமைப்பு, அந்நாட்டின் சில செய்தியாளர்கள் குழு மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, அதானி நிறுவனத்தை குறிவைத்தும், பிரதமர் மோடியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்த சதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நேரடியாக சம்பந்தம் உள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க அரசு நேரடியாக பண உதவிகளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ சதிக்கு, ஓ.சி.சி.ஆர்.பி., கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.இதை பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும், அந்நாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் இணைந்து இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் கூட்டுசதி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...