டிசம்பர் 9-ல் பிரதமர் மோடி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சிமாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத்தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜஸ்தானில் பிரதமர்

ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024, ராஜஸ்தான் உலக வர்த்தகக்கண்காட்சி ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் நடைபெறுப் இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘நிறைவு, பொறுப்பு, தயார் நிலை’ என்பதாகும். நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்க நடைமுறைகள், நீடித்த நிதி மேலாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள், பெண்கள் தலைமையிலான புத்தொழில்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெறும். ‘நகரங்களுக்கான நீர் மேலாண்மை’, ‘தொழில்களின் பன்முகத்தன்மை- உற்பத்தியும் அதற்கு அப்பாலும்’  ‘வர்த்தகமும் சுற்றுலாவும்’ போன்ற கருப்பொருள்களில் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.

வெளிநாடு வாழ் ராஜஸ்தானி மாநாடு, குறு,சிறு, நடுத்தர தொழில் மாநாடு  ஆகியவையும் இந்த மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலக வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கம், தேசிய அரங்கம், புத்தொழில் அரங்கம் போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும். இந்த மாநாட்டில் 16 கூட்டு செயல்பாட்டு நாடுகள் உட்பட 32 நாடுகள், 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

ஹரியானாவில் பிரதமர்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், நிதி உள்ளடக்கம் ஆகியவை குறித்த தமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பானிபட்டில் ‘பீமா சகி யோஜனா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இந்த முயற்சி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் அறிவு, காப்புறுதி விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சியும் உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பீமா சகி-கள் எல்ஐசி-யில் மேம்பாட்டு அதிகாரி பணிகளுக்குப் பரிசீலிக்க தகுதி பெறுவார்கள். வருங்கால பீமா சகிகளுக்கு நியமன சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியின்போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 495 ஏக்கர் பரப்பளவில் பிரதான வளாகமும் ஆறு மண்டல ஆராய்ச்சி நிலையங்களிம் ரூ .700 கோடிக்கும் அதிகமான செலவில் நிறுவப்படும். இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஒரு தோட்டக்கலைக் கல்லூரியும், 10 தோட்டக்கலைத் துறைகளை உள்ளடக்கிய ஐந்து பள்ளிகளும் இருக்கும். இது பயிர் மாற்றுத்தன்மை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை நோக்கி செயல்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...