‘ஹரியானாவில் மூன்றாவது முறை பதவியேற்ற பா.ஜ., அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மூன்று மடங்கு வேகத்தில் செயல்படும்,’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.பானிபட்: ‘ஹரியானாவில் மூன்றாவது முறை பதவியேற்ற பா.ஜ., அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மூன்று மடங்கு வேகத்தில் செயல்படும்,’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
பானிபட்டில், எல்.ஐ.சி.யின் ‘பீமாசாகி யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து பேசினார்.
மோடி பேசியதாவது:
மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், பாதுகாப்பு, வங்கி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஹரியானாவில் மூன்றாவது முறை பதவியேற்ற பா.ஜ., அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக மூன்று மடங்கு வேகத்தில் செயல்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, அவர்கள் முன்னேறுவதற்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் முக்கியம். அவர்களுக்கு முன்னால் உள்ள ஒவ்வொரு தடைகளும் அகற்றப்படுவதும் மிகவும் முக்கியம்.
பெண்கள் முன்னேற வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் நாட்டுக்கான புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கிறார்கள். நீண்ட காலமாக நாட்டில் பெண்களுக்குத் தடை செய்யப்பட்ட பல வேலைகள் இருந்தன. பா.ஜ., அரசு அவர்களுக்கு வரும் அனைத்துத் தடைகளையும் நீக்கத் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுயஉதவி குழுக்களில் உறுப்பினராக இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழுக்களுக்கு, 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு உதவி வழங்கியுள்ளது. சுமார் 1.15 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாறியுள்ளனர். 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பீமாசாகி யோஜனா’, அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி.,யின் முன்முயற்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அவர்கள் சிறப்பு பயிற்சி மூலம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ், பெண் முகவர்களுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.7,000, இரண்டாம் ஆண்டில் ரூ.6,000, மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். பீமாசாகிகளுக்கும் கமிஷன் பலன் கிடைக்கும். மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பீமாசாகிகளை நியமிக்க திட்டம் உள்ளது. பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்.ஐ.சி., முகவர்களாகப் பணியாற்றலாம். மேலும் பட்டதாரி பீமா சாகிஸ் எல்.ஐ.சி.,யில் டெவலப்மென்ட் ஆபிசர் பதவிகளுக்குப் பரிசீலிக்கப்படுவதற்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி என்ற அளவில் அனைத்தையும் எடைபோடுபவர்கள். பா.ஜ.,வுக்கு ஏன் பெண்களின் ஆதரவை அதிக அளவில் அளிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். தாய் மற்றும் சகோதரிகளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதுபவர்களால் இந்த வலுவான உறவை புரிந்து கொள்ள முடியாது.
இவ்வாறு மோடி பேசினார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |