மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், புதுதில்லியில் இன்று இரு அமைச்சகங்களுக்கும் உட்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், பன்முக சேவை ஊழியர்கள் முதல் செயலாளர் அளவிலான அதிகாரிகளும் பங்கேற்றனர். துறையின் இணையமைச்சர்கள் திரு பாகிரத் சௌத்ரி மற்றும் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் சௌகான், சுதந்திர தின உரையில், வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார்.
2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, கடினமாக பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.பிரதமர் கூறியது போல 3 மடங்கு அதிக வேகத்தில், 3 மடங்கு கடினமாக பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |