பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தான் பொதுத்துறை வங்கிகள் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தான் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் நேற்று பேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் ராகுல், ‘அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பினரை சந்தித்து பேசினேன். அப்போது, பொதுத்துறை வங்கிகளை நிலை மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்,’ என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்தியனும் எளிதாக கடன் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்த வங்கிகளை, தனியார் நிதி நிறுவனமாக்கி, பெரிய பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்குமானதாக மாற்றி விட்டார். நண்பர்களுக்கு அளவில்லாமல் பணத்தை வாரி வழங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களிடம் இருந்து லாபம் பெறும் நோக்கில் பொதுத்துறை வங்கிகள் மாறி விட்டது. ஆள்பற்றாக்குறை மற்றும் நெருக்கடியான சூழல் ஆகியவற்றால், இலக்குகளை அடையாமல் திணறி வருகின்றன. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின் போது கண்மூடித்தனமாக கடன்களை வாரி வழங்கியதால், பொதுத்துறை வங்கிகள் சரிவை சந்தித்தன. ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து, தங்களின் கூட்டாளிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.

கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 238 சதவீதமும், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 300 சதவீதமும் அதிகரித்துள்ளது. உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கடின உழைப்பை ராகுல் அவமதிக்கிறார், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ� ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ� ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல� ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்� ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க� ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...