இத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் வியாழகிழமை விடுவித்தனர். 29 நாள்கள் தங்களிடம் பிணைகைதியாக இருந்த பொசஸ்கோவை ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜினா ஹிகாகா பற்றி எந்தவித தகவலும் இல்லை.
மாவோயிஸ்டு அமைப்பின் மாநிலசெயல் குழு (ஓ.எஸ்.ஓசி) தலைவர் சவ்யசாச்சி பாண்டாவின் மனைவி சுபஸ்ரீபாண்டா விடுவிக்கப்பட்ட 2 தினங்களில் பொசஸ்கோ விடுவிக்கப்பட்டுள்ளார் .தாங்கள் பிடித்துவைத்திருந்த பொசஸ்கோவை விடுவிக்க வேண்டு மெனில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த ஏழு பேரை விடுவிக்கவேண்டும் என மாவோயிஸ்டுகள் நிபந்தனை_விதித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் சுபஸ்ரீபாண்டா. இவர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்க மாநில அரசு முன் வந்தது. இதனை தொடர்ந்து அவர் விடுவிக்க பட்டுள்ளார்
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.