”நேரு வளர்ச்சி மாடல் என்பது தற்போதைய காலகட்டத்துக்கு தோல்வியடைந்து விட்டது. அதில் இருந்து விடுபட சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நிடி ஆயோக் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா எழுதியுள்ள, ‘நேருவின் வளர்ச்சி மாடல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது.
இதில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
கடந்த 1947ல் அமெரிக்க நிபுணர் ஜான் பாஸ்டர் டல்லஸ், இந்தியா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்தியாவில் இடைக்கால ஹிந்து அரசு வாயிலாக, கம்யூனிச கொள்கையை புகுத்த முயற்சி நடக்கிறது’ என, அவர் கூறியிருந்தார். அப்போதிருந்த அரசை ஹிந்து அரசு என்று அவர் கூறியதை ஏற்கவில்லை. ஆனால், அவர் கூறிய கருத்து சரியா என்ற கேள்வி இருந்தது. அதற்கு இந்த புத்தகத்தில் விடை கிடைத்து உள்ளது.
அந்த கால கட்டத்தில் இருந்த தங்களுடைய பொருளாதார கொள்கைகள் தற்போதைய நடைமுறைக்கு சரியாக வராது என்று, ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளே, தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொண்டுஉள்ளன.
ஆனால், நம் நாட்டில் மட்டும் அப்போதிருந்த கொள்கைகளில் இருந்து விடுபட முயற்சிகளே மேற்கொள்ளவில்லை. நேருவின் வளர்ச்சி கொள்கைகள், நம் வெளியுறவு கொள்கை வரை விரிந்திருந்தது. இதைத் தவிர, அரசியல், நிர்வாகம், திட்ட கமிஷன், நீதித்துறை, ஊடகம், ஏன் கல்வி வரை அவை ஊடுருவியிருந்தன.
நேருவின் கொள்கைகள் தோல்வியடைந்தவை. கடந்த, 33 ஆண்டுகளில் அவரது கொள்கைகள் எடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், பெரிய அளவில் சீர்திருத்த முயற்சிகள் நடக்கவில்லை.
நேருவின் கொள்கைகள் தோல்வியடைந்தவை என்பதை உணர்ந்து தான், 2-014ல், அதை சீர்செய்யும் முயற்சிகள் துவங்கின. இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வெளியுறவு கொள்கையிலும், நம் நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |