இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, அரசியலமைப்பு சட்டமாக மாறின. இச்சட்டத்தின் படி நம் நாடு இயங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அரசியலமைப்பு சட்ட தினத்தன்று ( இன்று நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த், உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் உரையில் இடம் பெறுகிறது.

பார்லி.யில் ஜனாதிபதி உரை

அரசியலமைப்பு தினத்தையொட்டி இன்று (நவ. 26) பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுவதற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...