‘நவீன தமிழ்நாடு, திராவிடத்தால் உருவானது என முதல்வர் ஸ்டாலின் கூறுவது, காமராஜர் போன்ற தலைவர்களை அவமதிப்பதாகும்’ என்று, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் அறிக்கை:
விழுப்புரத்தில் நடந்த தியாகிகள் மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘திராவிடம் தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. இன்றைய நவீன தமிழகம், திராவிடத்தால் உருவானது’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி, ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. இன்றைய வளர்ச்சிக்கு ராஜாஜி, ஓமந்துாரார், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெரும் பங்களித்துள்ளனர்.
1998 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த பத்தரை ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியிலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளே, மாநிலத்தின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதையெல்லாம் திராவிடத்திற்குள் அடக்கி, தமிழகத்துக்குமிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது.
இது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட, தொழில்முனைவோர்களைஅவமதிக்கும் செயல். அவர்களின் திறமையை, அறிவாற்றலை, பங்களிப்பை, திராவிடம் என போலி சித்தாந்த சிமிழுக்குள் அடைப்பது பெரும் அநீதி.
‘திராவிடம்’ என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக்கி, தமிழ் மண்ணில் பிரிவினை எண்ணத்துக்கு விதைபோட்டவர், மதம் மாற்ற தமிழகம் வந்த, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்.
அவரது வழியில் சென்று, ‘திராவிடம், திராவிடர், திராவிட மாடல்’ எனக்கூறி, ‘தமிழ், தமிழர் எனக்கூறி தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கப்பார்க்கிறது தி.மு.க.,
இவ்வாறு கூறியுள்ளார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |