அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது பெற்ற இருதரப்பு உறவுகளின் வெற்றிகள் தொடரும் என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு நேற்று புறப்பட்டார். அங்கிருந்து, அமெரிக்காவுக்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்கிறார்.
டில்லியில் இருந்து நேற்று புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி:
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அழைப்பை ஏற்று, அங்கு செல்கிறேன். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் மாநாட்டில் பங்கேற்கிறேன்.
இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகளாவிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
பிரான்சின் மார்ஷலேயில் அமைந்துள்ள நம் நாட்டின் முதல் துணை துாதரகத்தை திறந்து வைக்க உள்ளேன்.
இதைத் தவிர, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு மஜார்கசில் அமைக்கப்பட்ட போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.
அதிபர் மேக்ரோனுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், 2047ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஆய்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளேன்.
அங்கிருந்து, அமெரிக்காவுக்கு செல்கிறேன். மீண்டும் அதிபராகி உள்ள என் அருமை நண்பர் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று, அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அவரது முதல் பதவிக்காலத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெற்ற வெற்றிகள் தொடரும்.
தொழில்நுட்பம், வர்த்தகம், ராணுவம், எரிசக்தி, வினியோக சங்கிலி என, பல துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளேன்.
இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலன்களுக்காகவும், உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |