‘இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகளை கொண்டுள்ளன’ என பிரதமர் மோடி பேசினார்.
தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பவுத்த மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: பகவான் புத்தரின் போதனைகள் உலகை அமைதியான முறையில் வழி நடத்துகிறது. இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பல துறைகளில் உறவுகள் மேம்பட்டு உள்ளன.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வழிகாட்டுதலை பவுத்தம் வழங்குகிறது. பகவான் புத்தர் மீதான நமது மரியாதை இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது.
புத்த மதம் தொடர்பான புண்ணியத்தலங்களை இணைக்க இந்தியா சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
நாளந்தா மகாவிஹாரா வரலாற்றில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் புத்தரின் போதனைகளை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக பல நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |