டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்

இந்தியா – தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி – தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நேற்று சென்றார்.

மோடியை வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரேவுடன், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக, பிரதமர் மோடி பேசினார்.

இந்த பேச்சின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாட்டுக்கும் இடையேயான துாதரக உறவை, பல்துறை ஒத்துழைப்பு உறவாக உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்த கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, குஜராத்தின் லோதாலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டுவது, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துடன், கல்வி, கலாசாரத்தில் இணைந்து செயல்படும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாக, அனைவருக்குமான சட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்துவதில் எப்போதும் ஆதரவாக இருக்க இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துக்கு இடையே சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வியில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகத்தில் பரஸ்பர வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள பாரம்பரிய, கலாசார உறவுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புத்த மதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ராமாயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் மின் ஆங்க் ஹிலாங்க் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

மியான்மரில் அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதற்காக, ‘ஆசியான்’ எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்க மின் ஆங்க் ஹிலாங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா தவிர்த்து, கடைசியாக, 2021ல் இந்தோனேஷியாவுக்கு மின் ஆங்க் ஹிலாங்க் சென்றார். அதன் பின், தற்போது தாய்லாந்துக்கு அவர் சென்றுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தலைசிறந்த தேசியவாதியான குமரி ஆ� ...

தலைசிறந்த தேசியவாதியான குமரி ஆனந்தன் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தமிழக ...

வெற்றி நாள் கொண்டாட்டம் பிரதமர� ...

வெற்றி நாள் கொண்டாட்டம் பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு மே 9ம் தேதி நடக்க உள்ள ரஷ்ய வெற்றிநாள் ...

தொழில்முனைவோரை உருவாக்கியுள்ள ...

தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது  முத்ரா கடன் திட்டம் “சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தாகத்தை தணிப்பதுடன், ...

பழங்காலத்தை நவீனத்துவத்துடன் � ...

பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம் – பிரதமர் மோடி பெருமிதம் ''பண்டையபாரம்பரியத்தை டிஜிட்டல்மயமாக்குவதன்மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன்இணைப்போம்'' என பிரதமர் மோடி ...

வரதக்கம் விண்வெளி பற்றி துபாய் ...

வரதக்கம் விண்வெளி பற்றி துபாய் இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் பட்டத்து ...

2029க்கு பிறகும் மோடியே பிரதமராக � ...

2029க்கு பிறகும் மோடியே பிரதமராக தொடர்வார் – தேவேந்திர பட்னவீஸ் பிரதமர் நரேந்திர மோடி 2029க்கு பிறகும் நாட்டை வழிநடத்துவார், ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.