பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சாதனை படைத்த பெண்களுக்கு பிரதமர் மோடியின் சமூக ஊடக பக்கங்களை இன்று (மார்ச் 8) ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பெண்களை கவுரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை 2020 முதல் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சாதனை பெண்கள் 6 பேர் பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கங்களை கையாண்டனர். இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (தமிழகத்தைச் சேர்ந்தவர்) தமது பதிவை பிரதமர் மோடி பக்கத்தில் வெளியிட்டார்.

அவர் அதில் கூறியதாவது; சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்துவது, கையாள்வது மிகவும் த்ரில்லாக இருக்கிறது. செஸ் வீராங்கனையான நான் நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியது பெருமை மிகுந்ததாக உள்ளது.

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எலினா மிஷ்ரா, இஸ்ரோ விஞ்ஞானி ஷில்பி சோனி ஆகியோர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது; இந்த உலகில் எல்லையில்லாத அறிவியல் தொழில்நுட்பம் உற்சாகமான ஒன்று. மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

நாட்டில் அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டத்தில் நம்மை போன்ற பல்வேறு விஞ்ஞானிகள் இருக்கின்றனர். நாட்டில் அறிவியலுக்கு மிகவும் துடிப்பான இடம் இருக்கிறது. எனவே அதிகம் பேர் பின் தொடர நாங்கள் அழைக்கிறோம் என்றனர்.

தனியார் நிறுவன முதன்மை செயல் அதிகாரி அஜைய்தா ஷா பதிவிட்டு உள்ளதாவது; பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண் தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பார். சுதந்திரமான சிந்தனையாளராக இருப்பார். தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் சிற்பி. நவீன இந்தியாவை உருவாக்குபவர். மகளிர் தினத்தில் பிரதமரின் சமூக வலைதள கணக்கை கையாள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

காளான் வளர்ப்பில் வியத்தகு எழுச்சியை படைத்தவர் அனிதா தேவி. பீகாரைச் சேர்ந்த இவர், பீகாரின் காளான் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். 2016ம் ஆண்டு முதல் நிறுவனத்தை நடத்தி 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். அவர் பிரதமர் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியதாவது;

காளான் உற்பத்தியின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை சுய முன்னேற்றம் அடைய செய்துள்ளேன். எனது நிறுவனம் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவற்றை மலிவான விலையில் வழங்குகிறது. எனது நிறுவனத்தின் மூலம் பெண்கள் சுயமரியாதையான வாழ்க்கையை பெற்றுள்ளனர் என்றார்.

வக்கீல் அஞ்சலி அகர்வால் தமது பதிவில் கூறி உள்ளதாவது; பிரதமரின் வலைதள பக்கத்தை கையாள எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடையாளங்களை, தடைகளை மறந்துவிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும், தனிநபரும் வாழ்க்கையை கண்ணியத்துடன், சுதந்திரத்துடன் வழிநடத்த முடியும் என்பதை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...