அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஆப்கானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான்
சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து ஆலோசனை செய்தார் . தொடர்ந்த அமெரிக்க ராணுவத்தினரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார் .
இந்நிலையில் அதிபர் ஒபாமா தனது ஒரு நாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்து ள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மேற்கு பகுதியில் குடியிருப்பு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 5 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என கருதப்படுகிறது
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.