உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தான் உதயநிதிக்கு நான் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் உங்களுடைய பிளஸ் 2 பாட புத்தகத்தில் சனாதனம், இந்துதர்மம் என்றால் என நீங்களே விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
அதைத்தான் குழந்தைகள் படிக்கிறார்கள். உதய நிதி பிளஸ் 2 பாஸ் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இல்ல படித்திருக் கிறாரா இல்லையா என எனக்கு தெரியாது. சினிமாவில் பிரபலமடைந்தார். ஸ்டாலின் மகன் என்பதால் பிரபல மடைந்தார். அனேமாக அவர் பிளஸ் 2 பாஸ்செய்திருப்பார். லயோலா கல்லூரிக்கெல்லாம் போயிருக்கிறார்.
கடல்வாழ் பழங்குடியினர்களாக நம்முடைய மீனவமக்கள் இருக்கிறார்கள். மலைவாழ் மக்களை ஆதிவாசிகள் என்றும் பழங் குடியினர் என்றும் நம் அரசாங்கம் பாதுகாத்து அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துவருகிறது. இன்று பழங்குடியின சமூகம் சார்ந்த திரௌபதி முர்மு, ஜனாதிபதியாக இருக்கிறார்.
மீனவர்கள், பர்வத குலத்தினரை கடல்வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். மீனவமக்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றுப்படுத்த வேண்டும். அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் மீட்கப்படவேண்டும். இதற்காக அவர்கள் கடல் வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்.
இந்த நாட்டில் பரதவர்கள் (மீனவர்கள்) அதிகமாக இருந்ததால்தான் பாரதநாடு என்ற பெயர் வந்தது. தசாவதாரத்தில் முதல் அவதாரமே மச்ச அவதாரம்தான். வேதங்களை தொகுத்தவர் யாரு, வியாசர் அவர் ஒருமீனவர். இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்படும்.
உதயநிதி என்பதே சமஸ்கிருத பெயர்தான். கருணாநிதி, தயாநிதி, இன்பநிதி- இவையெல்லாமே சமஸ்கிருதபெயர்தான். சனாதனத்தை அவர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். சனாதனம் என்பது மதத்தோடு தொடர்புடையதும் ஜாதி யோடு தொடர்புடையதும் அல்ல. அது தர்மத்துடன் தொடர்புடையது.
திருக்குறளில் அறம், பொருள் , இன்பம். சனாதனத்தின் அடிப்படையே தர்மம் தான். சனாதன தர்மம் பழமையானது, எந்தளவுக்கு பழமையானதோ அந்தளவிற்கு புதுமையானது என அர்த்தம். யாரையும் துன்புறுத்தாமல் எல்லோரையும் அரவணைப்பது சனாதனம். ஒன்றேகுலம் ஒருவனே தேவன் இதுதான் சனாதனம். இதுகுறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம், கருத்துரிமை இருக்கிறது. ஆனால் இழிவுப்படுத்த கூடாது.
சனாதனத்தை இழிவுப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சனாதனம் தொற்று, எச்ஐவி என்றெல்லாம் பேசி மக்கள்மனதை புண்படுத்து கிறார்கள். சனாதனம் என்றால் என்ன என்ற ஒரு முடிவுக்கு வாங்க .அதன் பிறகு அது பற்றி பேசுவோம்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |