அன்பு நிரந்தரமானது அல்ல

மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை மீது செல்கிறது. கணவனிடத்தில் முன்பு இருந்தது போல் தனக்கு அவ்வளவு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதே போலத்தான்

தந்தைக்கும். ஆழ்ந்த அன்பை செலுத்தக் கூடிய பொருள்கள் கிடைத்ததும் பழைய அன்பு படிப்படியாக மறைகிறது. நீங்கள் பள்ளியிலிருந்தபோது தாய், தந்தையர் அல்லது பள்ளித்தோழர்கள் வாழ்க்கையில் மிகவும் அன்பானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ, மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறந்து விடுகின்றன. புதிய அன்பு உணர்ச்சிகளே தீவிரமடைகின்றன.

ஒரு விண்மீன் தோன்றுகிறது. பிறகு இன்னும் பெரியதொன்று தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றவே. சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்த செஞ்சுடரே கடவுள், விண்மீன்கள் சிறிய அன்புகளாய் அமைகின்றன. இப்படிச் சூரிய ஒளி போன்ற அன்பு வெள்ளம் ஒருவனுக்குப் பொங்கி வருகையில் இறைப்பித்தன் என்று எமர்சன் கூறுகின்றாரே அத்தகைய பித்துப் பிடிக்கிறது. பிறகு மனிதன் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக் கடலில் எல்லாம் ஆழ்ந்து கரைந்து விடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் விலங்கின் கவர்ச்சிதான், இல்லையேல் அதில் ஆண், பெண் வேறுபாடு இருப்பானேன் ? ஒருவன் ஒரு உருவத்தின் முன்பு மண்டியிட்டுத் தொழுதால் அது கொடுமையான உருவ வழிபாடு * ஆனால் மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லை.

விவேகானந்தர் கல்வி சிந்தனைகள் , விவேகானந்தர் சிந்தனைகள், விவேகானந்தர் கருத்துக்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...