ஜம்மு காஷ்மீர் அரசு அமர்நாத் யாத்திரையை தொடருவதற்கு விருப்பவில்லை

 ஜம்மு காஷ்மீர் அரசு  அமர்நாத் யாத்திரையை தொடருவதற்கு விருப்பவில்லை இறந்துபோன அமர்நாத் யாத்ரீகர்கள் பற்றிய செய்திகளைத் தானாக கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வருடம் யாத்திரைக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததற்காகவும், அதிக பட்ச உயிரிழப்புகள் நேர்ந்ததற்காகவும், மத்திய உள்துறை

அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மற்றும் அமர்நாத் புனிதத்தல வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் ஆளுனர் திரு.வோரா அவர்கள் தலைமையிலான அமர்நாத் புனிதத்தல வாரியம் ஆகியவற்றின் அக்கறையின்மையும் உணர்வற்ற மனப்பாங்கும் வெளிப்படையாகத் தெரிந்தன. அமர்நாத் புனித யாத்திரையின் போது வழியில் சந்திக்கும் இயற்கையான மற்றும் அரசு ஏற்படுத்திய செயற்கையான கஷ்டங்களைப் பற்றிய ஹிந்து யாத்ரீகர்களின் வேண்டுகோள்களை கேட்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய பரிதாபமான நிலைமைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் அவர்கள் முடிவு செய்திருந்தனர். முழுவதுமாக இல்லாமல் இருந்த அடிப்படை வசதிகள் மற்றும் குழப்பம் நிறைந்த நிலைமைகள் பற்றிய வேதனை மிகுந்த கதைகள்,

  உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களால் போற்றப்படும் மிகவும் பழமையான உயர்ந்த யாத்திரையான அமர்நாத் ஜம்மு காஷ்மீர் அரசு இனியும் இந்த அமர்நாத் யாத்திரையைத் தொடருவதற்கு விருப்பமும் ஈடுபாடும் கொள்ளவில்லை என்பதற்குப் போதுமான சான்றுகளாகும். முதல் அமைச்சர் திரு.ஓமர் அப்துல்லா மற்றும் ஆளுனர் திரு.N.N.வோரா ஆகியோர் ஹிந்து யாத்ரீகர்கள் மேல் காட்டிய மனிதாபிமானமற்ற உணர்வற்ற மனப்பான்மையினால், உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களால் போற்றப்படும் மிகவும் பழமையான உயர்ந்த யாத்திரையான அமர்நாத் யாத்திரை தன் இருப்பையே இழந்துவிடும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது. இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அமைதி நம் காதை செவிடாக்குவதைப்போல் விளக்க முடியாதவாறு இருக்கின்றது. உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்கள் உடனே ஸ்ரீநகர் சென்று, முதல் அமைச்சர் மற்றும் ஆளுனர் ஆகியோருடன் யாத்ரீகர்களுக்கான அடிப்படை வசதிகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களின் சுகாதாரத்திற்கும் அவர்கள் தங்குவதற்கும் தேவையான வசதிகள் கிடைக்குமாறு உடனடி முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கோருகிறோம்.

2008-ஆம் ஆண்டு வசதிகள் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட யாத்ரீகர்களிடமும், ஜம்மு மக்களிடமும் உறுதி அளித்ததன்படி ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, யாத்ரீகர்களுக்கு ஏன் நிரந்தர தங்கும் வசதிகள் செய்து தரவில்லை என்பதற்கு மத்திய அரசு பதில் கூறியே ஆகவேண்டும். ஏற்கனவே தங்கள் சொந்த மண்ணை இழக்கச் செய்து விரட்டி அடிக்கப்பட்ட ஹிந்துக்கள் தங்களின் புனித யாத்திரையையும் கைவிட்டு விடவேண்டும் என்பதற்காக சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுகிறார்களா என்ன?

புனித அமர்நாத் பயணிக்கும் யாத்ரீகர்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளதை பாஜக வரவேற்கிறது.

அமர்நாத் யாத்ரீகர்களின் மீதான ஜம்மு காஷ்மீர் அரசின் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது.

 

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தருண் விஜய் அவர்களின் அறிக்கை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...