மழைவேண்டி சிறப்பு பூஜை கொட்டித்தீர்த்த மழை

மழைவேண்டி  சிறப்பு பூஜை கொட்டித்தீர்த்த மழை கர்நாடகாவில் மழைவேண்டி, மாநில அரசின் சார்பில், 34 ஆயிரம் கோயில்களில் சிறப்பு பூஜை செய்யபட்டது. பூஜையின் பயனாக கர்நாடகாவின் 3மாவட்டங்களில் பலத்த மழைபெய்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

கர்நாடகாவில் இந்தாண்டு போதுமான மழை இல்லாமல் மாநிலத்தின் பெரும் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது.மொத்தம் 146 தாலுகாக்கள் வறட்சி தாலுகா என, அறிவிக்கப்பட்டுள்ளது

இதைதொடர்ந்து , கர்நாடக அறநிலையத் துறை அமைச்சர் சீனிவாஸ்பூஜாரி, மாநிலம் எங்கும் 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜைகலை செய்யமுடிவு செய்தார். இன்றிலிருந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

சிறப்பு பூஜைக்காக ஒவ்வொரு கோவிளுக்கும் தலா, 5,000 ரூ செக்குடன் கோவில்களில் காலை முதல் மாலை_வரை செய்ய வேண்டிய பூஜைகள், ஹோமங்கள் குறித்த விளக்கத்துடன் அனைத்து கோவில்களுக்கு ஒரு_சுற்றிக்கையாக அனுப்பப்பட்டது. மாநில அரசு இதற்காக 17.5 கோடி ரூபாய் செலவுசெய்தது.

இன்று காலையிலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் கோவில்களில் மழைவேண்டி சிறப்பு பூஜைகள் தொடங்கின. இதனைதொடர்ந்து பெங்களூருவில் இன்று காலை 11 மணியிலிருந்து லேசான மழைபெய்தது. தென்கர்நாடகா மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது. பல மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு இதனால் போக்கு வரத்து பதிக்கபட்டுள்ளது . மூன்று மாவட்டங்களில் ரயில்சேவையே பாதிக்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுகிறது. சிறப்பு பூஜையின் மகிமையை கண்டு கர்நாடக மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...