நாட்டின் மத்திய மின் தொகுப்பில் இருந்து தங்களுக்கான கூடுதல் மின்சரத்துக்க்காகக் பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையில், மத்திய மின் தொகுப்பிற்கே தாங்கள் மின்சாரம் தரதயார் எனும் குஜராத் அரசின் அறிவிப்பு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மின் தொகுப்பில் ஏற்ப்பட்ட பிரச்னை காரணமாக நாட்டின் பாதி பகுதி இருளில் மூழ்கியது ,.இதனால் 15க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் சுமார் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் குஜராத் மாநிலம் மட்டும் சிறந்த நிர்வாகத்தின் காரணமாக பாதிக்கப்பட வில்லை .
இந்நிலையில், குஜராத் மாநில மி்ன் துறை அமைச்சர் சவுரப் படேல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள் கடும்மின்தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்பொருட்டு, மத்திய மின் தொகுப்பிற்கு 2000 மெகா வாட்ஸ் மின்சாரம் தர தங்கள் மாநிலம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ; மாநிலத்தின் மின் தேவையை விட , தங்கள் மாநிலம் அதிகளவில் மி்ன் சாரத்தை உற்பத்தி செய்துவருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள பாமரமக்களும், தாங்கள் நினைத்தநேரத்தில். நினைத்த மின்உபகரணங்களை இயக்க முடியும். கடந்த 1961ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை, 8 ஆயிரம் மெகா வாட்ஸ் மின் சாரத்தை உற்பத்தி செய்துவந்த தங்கள் மாநிலத்தில் , கடந்த 10 ஆண்டுகளில் மின்உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
குஜராத்தின் தற்போதைய மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட், ஆனால் குஜராத்தோ 15,906 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது , இந்தாண்டு டிசம்பருக்குள் 18 ஆயிரம் மெகா வாட்ஸ்க்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது .
மத்திய மின் தொகுப்பிற்கு தாங்கள் மி்ன்சாரம் தர தயாராக இருக்கும் நிலையில், பெட்ரோலை தங்கள் மாநிலத்துக்கு குறைந்த விலையில் மத்திய அரசு தர தயாரா என குஜராத் அரசு மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.