மத்திய அரசால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட தலைவர்களுக்கு பாராட்டு

மத்திய  அரசால் ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்கப்பட்ட தேசிய புனல் மின் கழகம் (என்.எச்.பி.சி) சட்லஜ்ஜல் வித்யுத் நிகம்  (எஸ்.ஜே.வி.என்.எல்) ஆகியவற்றின்தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று பாராட்டினார்.

பொது நிறுவனங்கள் துறை (நிதி அமைச்சகம்) 30.08.2024 அன்று வெளியிட்ட உத்தரவு, இந்த முன்னணி நீர்மின் நிறுவனங்களுக்கு  அதிகசெயல்பாட்டு மற்றும் நிதிசுயாட்சியை வழங்குகிறது.

இந்த வளர்ச்சி இரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று பாராட்டிய மனோகர் லால், எதிர்காலத்தில்  மேலும்பெரிய சாதனைகளை படைக்க இவை  தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.”பசுமைக் குடில் வாயுக்கள் அல்லது பிற மாசுபடுத்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்நாட்டிற்கு மின்சாரம் வழங்குவதற்கு வழிவகுக்கும் நீர் மின் ஆற்றலைப்பயன்படுத்துவதில் என்.எச்.பி.சி,  எஸ்.ஜே.வி.என்.எல் போன்ற  பொதுத்துறை புனல் மின்நிறுவனங்கள் முக்கியப்பங்கு வகிக்கும் நிலையில் இது நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன்,என்.எச்.பி.சி, எஸ்.ஜே.வி.என்.எல் ஆகியவை  வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகளை நிறுவவும், புதியசந்தைகளை அணுகவும், உள்ளூர் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும் சுயாட்சி பெற்றிருக்கும். மேலும், தொழில்நுட்ப கூட்டணிகள் மூலம் புதுமையை வளர்க்கும், சந்தைநிலைப்பாட்டைவலுப்படுத்தும்,  இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களை எளிதாக்கும்,  அதிகரித்த சந்தை பங்குடன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...