முதுநிலை நிர்வாக இயல் (எம்.பீ.ஏ) பட்டதாரிகளில் 21 % மட்டுமே உடனடியாக வேலைபெறும் தகுதியை பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது .
வேலை வாயிப்பு நிறுவனங்கள் நடத்திய தகுதி தேர்வில் நாடு
முழுவதிலுமிருந்து 2,264 எம்.பீ.ஏ பட்டதாரிகள் கலந்து கொண்டனர். அவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்த போது மேற்கண்ட தகவல் வெளிவந்துள்ளது. முன்னணி 25 வர்த்தக மேலாண்மை கல்வி நிறு வனங்கள் தவிர 100 பிரபலமான கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களின் பல் வேறு திறன்களை சர்வதேச தரம் வாய்ந்த தேர்வு முறைகளுக்கு மெரிட்டிராக் என்னும் அமைப்பு உட்படுத்தியது. இதற்கு முன் 2007 ஆம் ஆண்டில் இதே அமைப்பு நடத்திய ஆய்வில் 25 சதவீதம் பேர் உடனடியாக வேலை பெறும் தகுதியுடன் இருந்ததாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த தகுதி குறைந்துள்ளது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
இத்தேர்வில் கலந்து கொண்ட எம்.பீ.ஏ. பட்டதாரிகள், ஆங்கிலம் மற்றும் அளவிடு திறன் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.