முடிவேயில்லாத புற்றீசல் போன்று வெளிக் கிளம்பும் முறைகேடுகள், அரசாங்கத்தின் நஷ்டம் ஏற்படுத்தும், முடிவெடுத்தல்கள், முதலில் தவறு எதுவும் நடக்கவில்லை என்ற மறுப்புகள், பிறகு பதில் கூறுவதில் தாமதங்கள், விளக்கமளித்தல் ஒரு நல்லொழுக்கம்
இல்லை என்று நினைப்பது ஆகியவற்றைப் பற்றிய இந்திய தலைமை
தணிக்கை அதிகாரியின் தொடர்ச்சியான அறிக்கைகள் – ஆகியவைதான் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாட்டு முறைகள்.
சமீபத்திய அரசியல் நெருக்கடியைக் குறித்த இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின்
அறிக்கையை அடுத்து, தனது முந்தைய மிகப் பெரிய பிரம்மாண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை
கையாண்ட அதே முறையை அரசாங்கம் இதற்கும் கையாண்டது. அது சி.டபிள்யு.ஜி.
ஆக இருக்கட்டும் அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாக இருக்கட்டும் அல்லது
இஸ்ரோ-தேவாஸ் மற்றும் ஏர்செல்-மாக்ஸிஸ் சர்ச்சைகளாக இருக்கட்டும் அனைத்திற்கும்
ஒரே மாதிரியான சமாளிப்பு முறையைக் கையாண்டு வருகிறது. முதலில் அரசாங்கம்,
தவறு நடந்தது என்பதையே மறுத்துவிடுகிறது. பிறகு பிரச்சினை தானாகவே காணாமல்
போய்விடும் என்ற நம்பிக்கையில் எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறுவதில்
தாமதம் செய்வது என்ற கட்டத்திற்கு நகர்கின்றனர்.
இதற்கிடையே, இவர்கள் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட, தலைமை தணிக்கை அதிகாரி
போன்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் அந்தப் பதவிகளில் நீடித்து இருப்பதைக் குறித்தே கேள்விகள் எழுப்புகின்றனர்.
இது பொதுவாக நிறுவனங்களின் மீது செல்வாக்கு செலுத்த காங்கிரஸ் முயலும் வழிமுறை.
சில நேரங்களில் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கவும், தாங்கள் ஆளும் அரசுக்கு எதிராக
அவர்களை கேள்வி எழுப்ப துணியும் நேரங்களில், அவர்களை பேச முடியாமல் செய்வதற்கும்
இவற்றை காங்கிரஸ் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்கிறது. இதைவிட மோசமாக,
பாராளுமன்றத்தில் ஆதரவு ஓட்டுகள் வடிவில் சிறிய / பிராந்தியக் கட்சிகளின் ஆதரவையும்
வலியுறுத்திக் கேட்டுப் பெறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, நிலக்கரி ஒதுக்கீட்டு முறைகேடு சம்பந்தமான இந்திய
தலைமைத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கை கசிந்தபோது, அரசு அதைப்
பற்றி விவாதிக்க மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக, பாராளுமன்ற அமர்வு
நடைபெற்றுக்கொண்டிருந்த மே மாதத்தில், சி.ஏ.ஜி., அரசின் மீதான நிலக்கரி அறிக்கையை சமர்ப்பித்தது. அமர்வின் கடைசி நாள் அன்றுகூட அரசு அதை விவாதத்திற்கு எடுக்கவே இல்லை. தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதம மந்திரி நிலக்கரி
சம்பந்தமான அறிக்கையை வெளியிடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவசர அவசரமாக 142 நிலக்கரி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதுவும், விலை மலிவான ஏலமுறைகளைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டு வரும் சமயத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உண்மையில், விலை மலிவான ஏல முறைகளுக்கான முதல் ஆட்சேபனை பி.எம்.ஓ.விடம்
இருந்துதான் வந்தது. அதன் பிறகு, முதலில் சட்ட அமைச்சகம் ஒரு ஆலோசனை கூறியது.
அதற்கு சில மாதங்கள் கழித்து, முற்றிலும் மாறுபட்ட வேறொரு ஆலோசனையைக்
கூறியது. இவை அனைத்தும் இன்னமும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தனியார்
நிறுவனங்களுக்கு இதை ஒதுக்கீடு செய்யவும் அவசர முயற்சி நடைபெற்று வருகிறது.
நிலக்கரி பிரித்தெடுப்பதில் எந்த விதமான திறனும் இல்லாத குட்கா உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்குக்கூட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சுவாரஸ்யமான
விஷயம். சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டியுள்ள தொகையான 1,86,000 கோடி ரூபாய் லாபம் என்கிற
புதையல் தனியார் நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, 2ஜி இமாலாய ஊழல் குறித்து விவாதங்கள் நடந்தபோது,
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு அலைகளுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் இருந்தபோதும்,
நீதிமன்றங்கள் தாமாகவே முன் வந்து வலியுறுத்திய பிறகுதான் இது குறித்த நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டது. அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தும்
குற்றம் அல்லது குற்ற நோக்கம் நீதிமன்றத்தின் களத்தில் இருந்தால், இழப்பு ஏற்படுத்தும் அந்தக் கொள்கை பாராளுமன்ற குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தன்னுடைய பிடிவாதத் தன்மை மற்றும், திமிர்த்தனம் காரணமாக இந்த கோரிக்கைக்கு
அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் பாராளுமன்றத்தின் ஒரு அமர்வு முழுவதையும்
வீணடித்துவிட்டு, அதற்கு காரணமானவர்கள் என்று எதிர்கட்சிகளின் மேல் பழி சுமத்தியது.
இப்படி ஒரு குழுவை ஒருவழியாக அமைத்த பின், காங்கிரஸ் அரசு இதன் செயல்பாடுகளை
நகைச்சுவையாக்கிவிட்டது.
எந்தவித ஈடுபாடும் இல்லாமல், பாராளுமன்ற கூட்டுக் குழுவினர் என்று அழைக்கப்பட
வேண்டியவர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்து. அந்தப் பட்டியலில், நீண்ட காலத்திற்கு
முன்பே இறந்துவிட்டவர்களின் பெயர்கள்கூட இடம் பெற்றிருந்தன. அருண் ஷோரி
மற்றும் ஜஸ்வந்த் சிங் இருவரும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படத் தாங்களாகவே
முன்வந்தனர். மேலும், இந்த அரசின் பிடிவாதத்தன்மைக்கு மேலும் உதாரணமாக, ஏற்கெனவே திட்டமிட்டாற்போல, காங்கிரஸ் உறுப்பினர்கள், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அமளியை உண்டாக்கினர் என்ற செய்திகள் வெளிவந்தன. எனவே, வேறு வழியே இல்லாமல், பி.ஜே.பி. உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்றும்கூட, தேசத்தைக் கவலைகொள்ள வைக்கும் ஊழலான சி.டபிள்யு.ஜி. குறித்த
ஷங்குளு குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருமே இன்னமும் சட்டத்தின்
பிடிக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த அறிக்கையில் ஷீலா தீட்சித் தலைமையிலான
தில்லி அரசுதான் இந்த மாபெரும் ஊழலுக்குப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று வரை, சுரேஷ் கல்மாடி மீது குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை.
பாராளுமன்றத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
பிரதமர். ஆனால், தில்லியை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் இந்த அறிக்கையை
நிராகரித்துவிட்டார். பிரதமர் வாக்குறுதிக்கு ஏற்பட்ட கதி இதுதான்!
அந்த வழக்குகளைப் பொருத்தவரை “சம்பந்தப்பட்ட அமைச்சர்” சட்டத்தின் முன்
நிறுத்தப்பட்டார். இந்த வழக்கில், நிலக்கரிச் சுரங்கத் துறைக்கு பொறுப்பு
வகித்த “சம்பந்தப்பட்ட அமைச்சர்” என்பவர், பிரதமர்தான். ஆனால், தற்போது, காங்கிரஸ்
கட்சியும் அரசும் இதே அளவுகோலைப் பயன்படுத்த விரும்பவில்லை. 2ஜி மற்றும் ஏர்செல்-மாக்சிஸ் ஊழல்களில், அப்போதைய நிதி அமைச்சர், பி. சிதம்பரம்கூட விசாரணைக்கு
உட்படுவதிலிருந்து நழுவிக்கொண்டார். அதே நடைமுறை குறிப்பிட்ட அமைச்சர்
கூட்டணி கட்சிகளில் இருந்தால் மட்டுமே பொருந்தும்; இதுவே காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த மந்திரிகளாக இருந்தால், இது பொருந்தாது என்று அர்த்தமா? காபினெட்டில்
பிரதமர்தான் முதன்மையானவர். இந்த அரசு கூட்டுப் பொறுப்பு என்னும் கோட்பாட்டை
இழந்துவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமருக்கு
நேரடியாகவும், தார்மீக முறையிலும், அரசியல் ரீதியாகவும் பொறுப்பு உள்ளது.
பி.ஜே.பி. எப்போதும், நிர்வாகத்துக்கு மதிப்பளித்து வந்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக,
வெறும் பதில்களைப் பெறுவதற்காக மட்டும் இல்லாமல், நடவடிக்கைகளுக்காகவும்
சேர்த்து கேள்வி எழுப்ப வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின்
குறிப்பேடுகளில் பதிவு செய்வதற்காக விவாதத்தில் கலந்துகொள்வது எவ்வளவு
முக்கியமோ, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மறக்காமல் இருப்பதும் அதே அளவு முக்கியம்தான். பாராளுமன்ற பதிவேடுகளுக்கான விவாதங்கள், பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள், குழுக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற ஒத்துழைப்புகள் இருந்தாலும் , மீண்டும் மீண்டும் இந்த அரசு செயல் படாமல் இருந்து வருகிறது. இந்த முறை நாங்கள் நடவடிக்கையை முதலில் எதிர்பார்க்கிறோம்.
நன்றி : நிர்மலா சீதாராமன
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.