நாகர்கோவில் அருகே பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்ப்பட நூற்றுகனக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் நித்திரவிளையில் நடந்த ஒரு பிரச்னையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இதில், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்ம ராஜ் உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தர்மராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இதைகண்டித்து மார்த்தாண்டத்தில் மறியல் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்குள் காவல்துறையினர் அனுமதியின்றி ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பிரவேஷ் குமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்புதெரிவித்த பா.ஜ.கவினர் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனின் தலைமையில் போலீசாரின் தடையைமீறி மார்த்தாண்டத்தில் மறியல் செய்வோம் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர், திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு செல்வதாகவும் தன்னை செல்ல அனுமதிக்கும் படியும் கூறினார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்துநிறுத்தினர். இதனால் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பா,ஜ,க வினர் ஆத்திரமடைந்து கோஷம் எழுப்பினர். அங்கேயே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணனையும், அவருடன் இருந்தவர்களையும் கைது செய்தனர். மார்த்தாண்டம் மறியலுக்குசென்ற எம்.ஆர். காந்தியும், அவருடன் சென்ற வர்களும் தோட்டியோடு பகுதியில் கைதானார்கள். மேலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் பலரும் சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.