மத்திய பிரதேசத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகைதர இருக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு ராஜ பக்ஷேவுக்கு அளப்பு விடுத்தது பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜ்தான் என சமிபத்தில் வைகோ உள்ளிட்ட சில தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; , ‘ராஜ பக்ஷேவுக்கு, சுஷ்மா அழைப்பு விடுத்ததாக கூறுவது தவறான தகவல். உண்மையை அறிவதற்க்காக நான் சுஷ்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது இந்த தகவலை திட்ட வட்டமாக மறுத்த சுஷ்மா, ராஜபக்ஷேவை தான் அழைக்க வில்லை என்று கூறினார்’ என்றார்.
மேலும், ‘ராஜபக்ஷேவின் இந்திய வருகையை நாங்கள் கடுமையாக எதிர்க் கிறோம். இருப்பினும் ராஜபக்ஷே, பூடான் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் மத்திய அரசு தான் அழைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க மீது பழிபோட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு உதவநினைக்கும் சிலர் சுஷ்மா மீது பழிபோடுகின்றனர்’ எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவ குடும்பங்களை சுஷ்மா சந்தித்தது, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்நடத்தியது, இலங்கை தமிழர் களுக்கு ஆதரவாக சுஷ்மா பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டது போன்றவற்றை தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.