நான் ஒரு தாய் தெரியுமா

 நான் ஒரு தாய் தெரியுமா  13 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் இரக்கமற்ற கொடுங்கோல் மன்னன் தைமூர். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற தைமூர் உலகையே அழித்துவிடத் தீர்மானித் தான். 33 ஆண்டுகள் அழிவுப் பேயாட்டம் ஆடினான். ஒருமுறை தைமூரும் அவன் படைகளும் ரோஜாப் பள்ளத் தாக்கில் முகாமிட்டனர். அந்தப் பகுதி "மலர்களின் அன்பு' என்று கவிஞர்களால் அழைக்கப்பட்டது. 15 ஆயிரம் பாசறைகள்

பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டன; நடுவில் அரசன் தைமூரின் பாசறை. அவனைச் சுற்றிலும் அரசர்கள். நடுவில் கவி கிர்மானி! அவர் எப்போதும் உண்மையே பேசுவார். அனைவரும் தைமூரைக் கண்டு பயந்து நடுங்கினர்; கவி மட்டும் பயப்படுவதில்லை.

அன்று எல்லோரும் கவிஞனின் கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது பெண் ஒருத்தி கூச்சலிடும் ஒலி கேட்டது. சேவகர்கள் உள்ளே வந்து, ""அரசே, உங்களைத் தேடி ஓர் ஏழைப் பெண் வந்திருக்கிறாள்'' என்று அறிவித்தனர். ""அழைத்து வாருங்கள்'' என உத்தரவிட்டான் தைமூர். அப்பெண்மணி தைரியமாகத் தைமூரை அணுகி, ""அரசே, எனக்கு ஓர் அருமையான மகன் இருந்தான். எங்கள் நாட்டை நீங்கள் முற்றுகையிட்டபோது அவனுக்கு ஆறு வயது. உங்கள் படை எங்கள் நிரபராதி மக்களைக் கொன்று குவித்தது; என் மகனைக் கடத்திச் சென்றது. அரசே, நீங்கள் எங்களை வென்று எங்கள் உடமைகளை எல்லாம் உங்களுடையதாக்கிக் கொண்டீர்கள். என் மகன் எங்கிருக்கிறான் என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிவீர்கள்.

""நான் பல காலம் மலைகளையும், காடுகளையும், பாலைவ னங்களையும் கடந்து வந்தேன். வழியில் அச்சுறுத்திய துஷ்ட மிருகங்களிடம் "பிள்ளையைத் தேடி வரும் தாய் நான்' என்றதுமே அவை விலகி வழிவிட்டன. எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ""ஏனெனில் மிருகங்களுக்கும்கூட அம்மாக்கள் உண்டு! அன்னை இல்லாவிட்டால் கவிஞர்கள் ஏது, வீரர்கள் ஏது? பெண் களே இல்லாத உலகில் அன்பும் இல்லை; அன்பில்லாத உலகில் மகிழ்ச்சி எப்படி வரும்? அப்படிப்பட்ட தாயான நான் அரசே, என் மகனைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்கிறேன்! '' என்றாள்.

தைமூர் கோபமாக, ""பெண்ணே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா?'' என்று கேட்டான். துயரத்தின் உச்சியிலிருந்த அவளோ, ""மன்னா, நீ வெறும் மனிதன்; உயிர் களைப் பறித்து யமனுக்கு ஊழியம் செய்பவன். நானோ ஒரு தாய்! உயிரையே படைக்கவல்லவள். ஆகையால் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்! என் பிள்ளையைத் திருப்பித் தா!'' என முழங்கினாள்.

அதிசயம்! தைமூர் அப்படியே அடங்கி விட்டான். சற்று நேரம் மௌனமாக இருந்தான். அந்தத் தாயின் வார்த்தைகள் ஒரு புதிய கோணத்தை அவனுக்கு உணர்த்தின. அவனது மனம் மாறிற்று. தைமூர், ""பல காலமாக நான் மனிதர் களை அழித்து வந்தேன்; லட்சக்கணக் கான மரணங்களைப் பார்த்துவிட்டேன். எனக்கும் ஒரு மகன் இருந்தான்; ஆனால் அவனை மரணம் கவர்ந்து போய்விட்டது. ""என் பகைவர்கள் தங்கள் நாட்டிற் காக, உடைமைகளுக்காகவே போராடி னர்; யாரும் மக்களுக்காகப் போராட வில்லை. என் வாழ்நாளில் முதல் முறை யாக இதோ, இந்தப் பெண்மணி தன் அன்பு மகனுக்காகப் போராடுகிறாள்.

பிறரிடமும் காணாத துணிவு இவளிடம் இருப்பதன் ரகசியம் இவள் உள்ளத்தில் பொங்கும் அன்புதான். ""நான் மகனை நேசித்த அளவே இவளும் நேசிக்கிறாள்! ஆனால் இவளது அன்பு ஆக்கப்பூர்வமானது. எனது அன்பு முட்டாள்தனமானது'' என்று கூறித் தன் பணியாட்களிடம் அவளது மகனை அவளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்

நன்றி கே.நிருபமா ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...