பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண்

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவில் உள்ள சுந்தர்கர்க் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சிவப்பு நிற ஆடை அணிந்தபடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை முகாமில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில பா.ஜ., துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய்பாண்டாவிடம் சென்றுள்ளார். தாம் கையில் வைத்திருந்த 100 ரூபாயை அவரிடம் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, அவரிடம் இந்த ரூ.100ஐ வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பழங்குடியின பெண்ணின் இந்த செயலைக் கண்டு வியந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா இந்நிகழ்வை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விரிவாக பதிவிட்டு உள்ளார். பழங்குடியின பெண் ரூ.100 தரும் போட்டோவையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்.

தமது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி இருப்பதாவது; ஒடிசா சுந்தர்கர்க் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ஒடிசா ஆதிவாசிப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமரிடம் தருமாறு கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் கூறுமாறு தெரிவித்தார்.

அந்த பணத்தை நான் வேண்டாம் என்று கூறி விளக்கினேன். ஆனால் அப்பெண்மணி அதை மறுத்துவிட்டார். பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவே இல்லை. இதுதான் ஒடிசா மற்றும் பாரதம் உணரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஜெய் ஜெகன்நாத் என்று பதிவிட்டுள்ளார்.

பைஜெயந்த் ஜெய்பாண்டாவின் வலைதள பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:

இந்த அன்பு என் உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது. எப்போதும் ஆசிர்வதிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். உங்களின் ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு தருகிறது.

இவ்வாறு தமது பதிவில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...