ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை செய்வது , அவர்களின் மீது நம்பிக்கை வைப்பது என்பது காங்கிரஸ கட்சியின் ரத்தத்திலேயே கிடையாது என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது; ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை செய்வது , நம்பிக்கை வைப்பது என்பதெல்லாம் காங்கிரஸன் ரத்தத்திலேயே கிடையாது.
நாங்கள் ஆள்வோம்; பிறர் எங்களை பின்பற்றவேண்டும் எனும் ஆணவ போக்குதான் அந்தகட்சியின் மிகப்பெரிய அறிவீனம். நாட்டின் நலனைமட்டுமே கருத்தில்கொண்டு மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ்பெறும் துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார் .
அதற்காக நாம் அவரைப் பாராட்டவேண்டும். இந்த முடிவு மத்திய அரசின் ஸ்திர தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இப்போது மத்தியில் வெறும் காங்கிரஸ்சின் ஆட்சிதான் இருக்கிறது. இதனால் மத்திய அரசின் வீழ்ச்சி தொடங்கி விட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டுமா என்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பிறகட்சிகளுடன் கலந்து ஆலோசிப்போம் என்றார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.