கூடங்குளம் (மின்) சாரமற்ற போர்

 கூடங்குளம் (மின்) சாரமற்ற போர் கீழே உள்ள வாழ்வாதார பெட்டி செய்தியை பாருங்கள் , இத்தனை ஆயிரம் உள்ளூர் வாசிகளின் பிழைப்பில் மண்ணை போடுகிறார்கள் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்ட புகழ் உதய குமார் , பிஷப் அம்புரோஸ் வகையறாக்கள் என்பது கூடங்குளத்தை பற்றி பேசுகிற பலருக்கும் கண்ணில் படுவதே இல்லை .

வாழ்வாதாரத்துக்கு  உத்தரவாதம் , மக்கள் வெளியேற்றமும் இல்லை

கூடங்குளம் அணுமின் திட்டத்திற்காக ஏற்க்கனவே சுமார் 3100 ஏக்கர் கையகப்படுத்தப் அணு உலை எதிர்ப்புபட்டுள்ளது . கூடுதல் அணு உலைகள் இந்த வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட உள்ளது. இதனால் கூடுதலாக நிலம் கையகபடுத்த தேவை இல்லை. எனவே மக்கள் யாரும்  வெளியேற்ற படமாட்டார்கள். இந்தியாவில் தற்பொழுது 16 அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அணு உலைகள் இயக்கத்திற்கு பின்பும் அங்கு வாழும் மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதே இதற்க்கு சான்றாகும். அணு உலையிலிருந்து 2 கி,மீ முதல் 3 கி,மீ வரையிலான வட்டாரப் பகுதிகளில் , கிராம மக்களின் இயல்பான வாழ்க்கைக்கும் , இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சிக்கும் எந்த இடையூறும் இல்லை.

கூடங்குளம் முதலாவது மற்றும் இரண்டாவது அணுமின் திட்டத்தில் 597க்கும் மேற்ப்பட்ட படித்த இளைஞர்கள் தகுதி அடிப்படையில் வெளிப்படையன தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 369 க்கும் அதிகமானவர்கள் ராதாபுரம் தாலுகா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 8500 க்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் தற்பொழுது பணிபுரிகிறார்கள் . அதில் 2400க்கும் மேற்ப்பட்டவர்கள் ராதாபுரம் தலுக்கவை சேர்ந்தவர்கள் . மறைமுக வேலைவாய்ப்பின் மூலம் பல்லாயிரக் கணக்கான சுற்றுப்புற கிராம மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பல அணு உலைகள் நிறுவுவதன் மூலம் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கை தரம் பன்மடங்கு உயரும் . அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள பிற பகுதிகள் அபரிமித முன்னேற்றம் அடைந்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

அணுமின் நிலையத்தை நாடே எதிர்பார்க்கிறது . குறிப்பாக தமிழ்நாடு நாளிதழ்களில் இன்றைய ராசி பலன் என்று தகவல் வெளியிடுவது போல , இன்றைய மின்வெட்டு என்று நாள் தவறாமல் எச்சரிக்கை வெளியிடுகர அவலம் தொடர்கிறது . கோடிக்கணக்கான பொதுமக்களிடம் மிசரத்தின் தேவை பற்றி பேட்டி எடுத்துதான் தகவல் தரவேண்டும் என்றில்லை. மின்தடை எப்போது ஒழியும் என்று தெரிந்து கொள்ளத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

கோவை- ஈரோடு-திருப்பூர்-கரூர் வட்டாரத்தில் மின்சார பசியால் சிறுதொழில்கள் சுருண்டுவிட்டன. லட்ச கணக்கான தொழிலாளர்கள் வாயிற்று பசியல்சுருண்டு விட்டார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

தமிழகத்தின் மின்சார தேவையில் பாதி அளவுக்கு பூர்த்தி செய்யகூடிய கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி எப்போது தொடங்கும் , அக்டோபர் முதல் வாரத்தில பிறகா ? என்பதுதான் தமிழக அரசு உளப்பட அனைவரும் கேட்டு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் கேள்வி.

கூடங்குளத்தில் அணுமின் நிலைய உற்பத்தி தாமதமாகும் என்றோ தள்ளிப்போகும் என்றோ பேசப்படுவதை காது கொடுத்துக் கேட்டு சகிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.இந்த சூழலில்தான் அணு உலையில் எரிபொருள் நிரப்பாதே என்று குரல் கொடுக்கிறது ஒரு கூட்டம் . போன வெள்ளியன்று கடலில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த இந்த உதயகுமார் பட்டாளத்திற்கு , உச்ச நீதிமன்றம் பொட்டில் அடித்தாற்போல் புத்திமதி சொல்லிவிட்டது . எரிபொருள் நிரப்புவதை இந்த நீதிமன்றம் தடைசெயயபோவதில்லை என்று .

அணுமின் நிலையம் இயங்கினால் கதிர்வீச்சு காரணமாக சுற்று வட்டார ஊர்களில் மக்கள் பதிக்க படுவார்கள் என்பதுதான் திருநெல்வேலி மாவட்ட சர்ச்சுகள் தூண்டிவிடும் பிரச்சாரம். அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை என்று நிபுணர்கள் பல முறை உத்தரவாதம் அளித்தாயிற்று பாருங்களேன்.

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்

பத்திரம் எழுதி தராத குறையாக குறையாக கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிவித்த விஞ்ஞானிகள்

  • பாரத அணுசக்தி கமிஷனின் முன்னால் தலைவர் ஸ்ரீனிவாசன்
  • கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்த மத்திய அரசு குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் .
  • கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த நால்வர் நிபுணர் குழு தலைவர் பேராசிரியர் இனியன்.

ஆனால் உலை எதிர்ப்புக் குழு தலைவர் உதய குமார் , பிஷப் அம்புரோஸ், வகையறாக்களுக்கு இவர்களை எல்லாம் விட அதிகம் தெரியும் போலிருக்கிறது .

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கூடங்குளம் அணுமின் நிலையம் மின்சார உற்பத்திக்கான தயாரிப்பை தொடங்கியது . அதற்குள் மக்கள் வரிப்பணத்தில் ரூ.14000 கோடிக்கு மேல் முதலிடு செயப்பட்டிருந்தது .வந்தார்கலையா உதயகுமார் பார்ட்டியார்!. இழுத்து மூடு கோஷங்களோடு. மக்கள் வரிப்பனமாவது தேசத்தின் மின்சாரத் தேவையாவது, மண்ணாங்கட்டியாவது !

எது இந்த கூட்டத்தாருக்கு இவ்வளவு தைரியம் கொடுக்கிறது ? ஒரு வருடமாக மத்திய உள்துறையின் உளவு அமைப்புகள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புக்கு அன்னியர் கையே தூண்டுதல் என்று பல்லவி பாடி வருகின்றன . பழைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அன்னிய சக்தி தூண்டுதல் என்றார் . புதிய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயும் அதையே மறுபடி சொல்லியிருக்கிறார்

அன்னிய சக்தி கோடிக்கணக்கில் அன்னிய பண உதவியாக உள்ளே வருகிறது (பார்க்க பெட்டி செய்தி ) அதற்க்கு வாய்க்கால் தென் மாவட்டங்களில் உள்ள என்.ஜி.ஒ அமைப்புகள் . அவற்றில் உளவுத் துறையின் வலையில் சிக்கியுள்ள பல அமைப்புகள் பாதிரிகளால் நடத்தப் படுபவை என்பது அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய சங்கதி.

இங்கே சற்று உள் விஷயம் , கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் பாரத-ரஷ்ய கூட்டு முயற்சி. இந்த நிலையத்தை பெற அமெரிக்கா ஆசைப்பட்டது ஆனால் கைநழுவியது. எனவே அமெரிக்காவுக்கு ஆத்திரம் வருவது நியாயம். அதென்ன சர்ச் அமைப்பு அமெரிக்காவின் எதிரிக்கு விரோதமாக எதிர்ப்பைத் தூண்டுவது? . விசுவாசம் பயங்கரமாக இருக்கிறதே?

மத்திய உளவுத் துறைக்குதன் எல்லாம் வெளிச்சம். குற்றத்துக்கான தடயம் தேடி ஓடும் போலீஸ் மோப்ப நாய் பாதியில் நின்று விட்டது என்று செய்திவருமே. அதுபோல ஆகாமல் அமெரிக்கா – பாதிரி – அணுமின் நிலைய எதிர்ப்பு சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியையும் தேசத்துக்கு அடையாளம் காட்டுவது அவசியம். செப்டம்பர் 20 அன்று உச்ச நீதிமன்றத்தில் கூடங்குளம் வழக்கு விசாரணை நடக்கும். அதன் பின் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி நடக்கும் என்று நம்புவோம் . வீட்டில் தேவையான ஸ்விட்ச்களை எல்லாம் தட்டி வைப்போம்.

கூடங்குளம் அணுமின் நிலையம், நிலைய , கூடங்குளம் அணு உலை, அணு உலை எதிர்ப்பு, கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்.

நன்றி; பெரியசாமி விஜயபாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...