2ஜி முறைகேட்டை விசாரித்து வரும், பாராளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.,), பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, சம்மன் அனுப்பமறுத்ததால், மூன்றாவது முறையாக, கூட்டத்திலிருந்து பா.,ஜனதா நேற்று வெளிநடப்புசெய்தது.
1.76 லட்சம் கோடி ரூபாய், முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி, எம்பி.,க்களை கொண்ட, ஜேபிசி.,யும் விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடுகள் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங், நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரம் ஆகியோரை, கூட்டுக் குழுவில் ஆஜர்படுத்தி, சாட்சிகளாக விசாரிக்கவேண்டும் என, பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.ஆனால், காங்கிரஸ் எம்.பி., பிசி.சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, ஜேபிசி., பிரதமருக்கு சம்மன் அனுப்பமறுக்கிறது.
சம்மன் அனுப்பினால் தான், கூட்டுக் குழு கூட்டங்களில் கலந்துகொள்வோம் என்று தெரிவித்து கூட்டங்களை, பாஜக புறக்கணித்து வருகிறது .இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, யஷ்வந்த் சின்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ஆஜரானால்தான், உண்மை வெளிவரும்.அவருக்கு சம்மன் அனுப்பப்படவேண்டும்; அவ்வாறு சம்மன் அனுப்புவது ஒன்றும் தவறில்லை. ஏற்கனவே, பலமுறை, பல பிரதமர்கள், ஜேபிசி., முன்பு ஆஜராகி யுள்ளனர் என்று தெரிவித்திருந்தார். நேற்று மீண்டும், ஜேபிசி., கூடியது. பிரதமருக்கு சம்மன்_அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் தலைவர், காங்கிரஸ் எம்.பி., பிசி.சாக்கோ, தன் முடிவில் உறுதியுடன் இருந்ததால், பாஜக.,வின், ஆறு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.