அஜ்மல் கசாப்பின் ஆரம்ப கால வாழ்க்கையே சரியில்லாததால்தான் இந்தகதிக்கு ஆளாகி இருக்கிறான்.அஜ்மல் காசாப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில் உள்ள பரித் கோட் கிராமத்தில் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ந்தேதி பிறந்தான். அவனது தந்தை பெயர் அமீர்சபான் கசாப். தாயார் பெயர் நூர் இலாகி. இவர்களின் 3வது
மகன்தான் அஜ்மல்கசாப். இவனுக்கு ருகையா என்ற அக்கா, அப்சல் என்ற அண்ணன், சுரையா என்ற தங்கை, முனிர் என்ற தம்பி ஆகியோர் உள்ளனர்.
அவனது தந்தை பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். இதில் வருமானம் இல்லாததால் குடும்பத்தை வறுமை வாட்டியது. எனவே அஜ்மல்கசாப் 13 வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்திவிட்டான்.அஜ்மலின் அண்ணன் அப்சல் லாகூரில் கூலி தொழில் செய்து வந்தான். அஜ்மல் லாகூர் சென்று அண்ணனுடன் தங்கியிருந்து வேலை பார்த்தான். ஆனால் அங்கும் அவன் நிலையாக இருக்கவில்லை. மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினான்.2005-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது தனது தந்தையிடம் புதுத்துணி எடுத்து தரும்படி கேட்டான். ஆனால் அவர் புதுத்துணி வாங்கி கொடுக்கவில்லை. இனதால் தந்தையிடம் சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டான். அதன் பிறகு வீட்டிற்கே அதிகம் வருவதில்லை. பல இடங்களில் சுற்றிதிரிந்தான். அப்போதுதான் அவனுக்கு முசாபர்லால் கான் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் சேர்ந்து சிறியஅளவிலான திருட்டுகளில் ஈடுபட்டனர். பின்னர் வழிப்பறிகளிலும் இறங்கினார்கள். வழிப்பறிசெய்வதற்கு துப்பாக்கி இருந்தால் உதவியாக இருக்கும் என அவர்கள் கருதினார்கள். எனவே இருவரும் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி ராவல் பிண்டி நகருக்கு துப்பாக்கி வாங்கு வதற்காக சென்றனர். துப்பாக்கி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது லஷ்கர்-இதொய்பா தீவிரவாத இயக்கத்தின் அரசியல் பிரிவான ஜமாத்_உத்தவா அமைப்பினர் அங்குநோட்டீஸ் வினியோகித்து கொண்டிருந்தனர்.அதில் காஷ்மீரில் முஸ்லிம்களை இந்திய ராணுவம் கொல்வதுபோல சித்தரித்திருந்தனர். இதற்கு பழிவாங்க இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேரவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அஜ்மல் கசாப், முசாபர்லால் கான் இருவருக்கும் தீவிரவாத இயக்கத்தில் சேரும் ஆசைஏற்பட்டது.
ஜமாத் உத்தவா அமைப்பினர் அவர்களை அழைத்து சென்று மூளைசலவை செய்யும் வகையில் பேசினார்கள். இதனால் இருவரும் தீவிரவாதஇயக்கத்தில் சேர முடிவுசெய்தனர். அவர்கள் லஷ்கர்-இதொய்பா தீவிரவாத இயக்கமுகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.முதலில் மர்காஸ்தைபா என்ற இடத்தில் அவர்களுக்கு தீவிரவாதபயிற்சி அளிக்கப்பட்டது. அஜ்மல்கசாப்புடன் 24 தீவிரவாதிகளுக்கு கடுமையான பயிற்சிகளை அவர்கள் அளித்தார்கள். பிறகு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் முசாபராபாத் மலைப் பகுதிக்கு சென்று கடுமையான பயிற்சி அளித்தனர். இந்நேரத்தில் தான் மும்பையில் தாக்குதல்நடத்தும் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா தயாரித்தது. அதற்கு 10 பேரை தேர்வுசெய்ய திட்டமிட்டனர். அதில் அஜ்மல் கசாப் உள்பட 10 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு படகில் செல்லவேண்டும் என்பதற்காக அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பேருக்கும் படகு ஓட்டும் பயிற்சி, நீச்சல்பயிற்சி, நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தும் பயிற்சி, தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் பயிற்சி ஆகியவைகள் அளிக்கப்பட்டன.
26 வகையான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தபயிற்சியை லஷ்கர்-இதொய்பா மூத்த தளபதி ஷகீர் உர் ரகுமான் அளித்தார். அஜ்மலுக்கு உருதுமொழியை தவிர வேறுமொழி தெரியாது. எனவே அவனுக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழியும் சொல்லிகொடுக்கப்பட்டது. அஜ்மலை மும்பை தாக்குதலுக்கு பயன்படுத்துவதற்காக அவனது குடும்பத்துக்கு 1 1/2 லட்சம் ரூபாயை வழங்கியதாக தெரிகிறது . அஜ்மலிடம் மும்பையில் உள்ள தாஜ்மகால் ஓட்டல், ஓபராய் ஓட்டல், தாஜ்மகால் டவர் ஓட்டல், நாரிமன் இல்லம் ஆகிய இடங்களை தாக்குவதற்காக வரைபடம் கொடுக்கப்பட்டு இருந்தது.
மும்பை கடற்கரையில் வந்து இறங்கிய அவர்கள் ஒவ்வொரு பகுதியாக பிரிந்துசென்று தாக்குதலை தொடங்கினார்கள். அஜ்மல் காசாப்பும், இஸ்மாயில் கான் என்ற தீவிரவாதியும் சத்ரபதிசிவாஜி ரெயில் நிலையத்தில் தங்கள் முதல் தாக்குதலை தொடங்கி னார்கள்.அங்கு ஏராளமானோரை சுட்டுக் கொன்றுவிட்டு வெளியேவந்தனர். அப்போது அங்குவந்த போலீஸ் வாகனத்தை அவர்கள் நோக்கி சரமாரியாக சுட்டார்கள். அதில் மும்பை அதிரடிப்படை தலைவர் ஹேமத்கார்க்கரே உள்ளிட்ட 4 பேரை சுட்டுக்கொன்றனர். அவர்கள் பயன்படுத்திய ஜீப்பை எடுத்துக் கொண்டு மெட்ரோ சினிமா தியேட்டர்நோக்கி சென்றனர்.அப்போது அங்கு இருந்த போலீசார் ஜீப்பைநோக்கி சரமாரியாக சுட்டார்கள். இதில் அவர்களது ஜீப் பஞ்சராகி மேற்கொண்டு செல்ல முடியவில்லை.
இதையடுத்து இன்னொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு 2 பேரும் சவ்பாத்திநோக்கி சென்றனர். ஆனால் அங்கு போலீசார் தடுப்புவேலிகளை அமைத்திருந்தனர். அதைத் தாண்டி செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் போலீசார் அஜ்மல்சென்ற வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்கள். இதில் இஸ்மாயில்கான் கொல்லப்பட்டான். அஜ்மல் தொடர்ந்து செல்லமுடியாமல் தடுமாறினான். அப்போது போலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து அவனை மடக்கி பிடித்துவிட்டனர். அவனை பலத்த பாதுகாப்புடன் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவ ஊழியர்களிடம் அஜ்மல் கசாப் என்னை கொன்றுவிடுங்கள் என்று கதறினான்.லஷ்கர்- இதொய்பா இயக்கத்தில் இருப்பவர்கள் காவல்துறையிடம் பிடிபடக் கூடாது, பிடிபடும் நிலைவந்தால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் அவன் தற்கொலைசெய்யாமல் போலீசிடம் சிக்கிகொண்டு விட்டதால் தனது குடும்பத்தினரை லஷ்கர்-இதொய்பா தீவிரவாதிகள் கொடுமை செய்யக் கூடும் என்று கருதி அவன் தன்னை கொல்லும்படி மருத்துவ ஊழியர்களிடம் தொடர்ந்து கூறிவந்தான்.
அஜ்மல் கசாப் போலீசாரிடம் பிடிபட்ட விஷயமே ஒருநாள் கழித்துதான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அவனை ரகசிய இடத்தில்வைத்து காவல்துறை விசாரித்து வந்தனர். அப்போது அவன் தாக்குதல் பற்றிய முழுவிவரங்களையும் காவல்துறைடம் தெரிவித்தான். அப்போதுதான் பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் பங்கேற்றிருப்பது தெரியவந்தது. அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று அறிவித்தபோது பாகிஸ்தான் அரசு இதை மறுத்தது. அவன் எங்கள் நாட்டை சேர்ந்தவன் அல்ல என்று கூறியது.
ஆனால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் செரீப் அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்தான் என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் அரசும் அஜ்மல் கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவன்தான் என்று அறிவித்தது. அஜ்மல்கசாப் பிடிபட்டவுடன் அவனது சொந்த ஊருக்கு பல்வேறு பத்திரிகைநிருபர்கள் சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள்யாரும் கசாப்பின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை சந்தித்து விடக் கூடாது என்பதற்காக குடும்பத்தினர் அனைவரையும் பாகிஸ்தான் அரசு ரகசியஇடத்திற்கு கொண்டு சென்று விட்டது. ஆனாலும் உண்மை விவரங்கள் அனைத்தும் வெளியே வந்துவிட்டன.
கசாப் ஜெயிலில் இருந்தபோது பல்வேறு அட்ட காசங்களை அரங்கேற்றி வந்தான். எனக்கு 17 வயது தான் ஆகியது. மைனர் நான் என் மீது வழக்கு தொடரமுடியாது என்று முதலில் கூறினான். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அடம் பிடித்தான்.சிறையில் கொடுக்கப்படும் உணவுகளை சாப்பிட மறுத்த அவன் பிரியாணி, போன்ற அசைவ உணவுகள்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான். அஜ்மல்கசாப்புக்கு பாதுகாப்பு மற்றும் பல் வேறு வகையான செலவுகளுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம்கோடி வரை செலவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனை ஜெயிலில் வைத்திருப்பதே பெரும் சுமையாக இருந்தது. இந்நிலையில் அவன் கதை முடிக்கப்பட்டுவிட்டதால் நிம்மதி பெருமூச்சு எழுந்துள்ளது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.