கசாப்பின் தூக்கும் காங்கிரசின் தந்திரமும்

கசாப்பின் தூக்கும் காங்கிரசின்  தந்திரமும்  மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலில் கைதுசெய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல்கசாப் கடந்த நவ. 20ம் தேதி, பூனா எரவாடா சிறையில் ரகசிய மாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப் பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப் போவது இதுதான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள்

வெளிப்படுத்யிருப்பது ஆறுதல் தருகிறது . ஆயினும், இந்த தண்டனையின் பின்னணியில் இருக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

2008, நவம்பர், 26ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர் – இதொய்பா பயங்கரவாதிகள் பத்து பேர் கடல்வழியாக மும்பையில் பயங்கர ஆயுதங் களுடன் நுழைந்தனர். அவர்கள் மும்பை ரயில்நிலையத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புகுந்து கண்மூடித்தனமாக நடத்திய கொடூரத்தாக்குதல்களில் காவல்துறை அதிகாரிகள் பலர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் படுகாயம்அடைந்தனர். தாஜ், டிரைரென்ட் ஓட்டல்களில் பதுங்கிக்கொண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் 60 மணி நேரம் போராடிவென்றனர். இந்த சண்டையில் ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; கசாப் மட்டும் துப்பாக்கி கையுமாக பிடிபட்டான்.

இத்தாக்குதலால், இந்தியா மீதான பாகிஸ்தானின் வெறுப் பூட்டும் ரகசிய போர் முறை அம்பலமானது. ஏற்கனவே நாடாளுமன்றம் தாக்குதல், மும்பை தொடர் குண்டு வெடிப்பு என பல பயங்கரவாத செயல்களைப் பார்த்திருந்தாலும், மும்பை 26/11 தாக்குதல் உலகிற்கே அதிர்ச்சி தருவதாக , பயங்கரவாதத்தின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியது. தவிர, உள்ளூரில் ஆதரவுத்தளம் இல்லாமல் இத்தகைய  திட்டமிட்ட கொடூரத்தாக்குதலை நடத்துவது சாத்தியமல்ல என்பது நமது அரசுகளுக்கும் விசாரணை அமைப்பு களுக்கும் புரிந்தது.

பயங்கரவாதியாக இருந்த போதும், கசாபுக்கு இந்திய சிறையில் மிகுந்தபாதுகாப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. அவனை காவல் துறையினர் விசாரித்த போது கூட சித்ரவதை செய்யவில்லை. ஒரு பக்குவப்பட்ட ஜனநாயகநாடு என்பதை கசாப் வழக்கில் நமதுஅரசு நிரூபித்தது. கசாப் கோரிய அனைத்து வசதிகளும் அவனுக்கு செய்துதரப்பட்டன. அவனுக்கு இலவச சட்டஉதவியும் வழங்கப்பட்டது. அவனுக்காக வாதாட வழக்குரைஞர் ஒருவரை நமது அரசே_நியமித்தது. குற்றவாளி என்ற போதும் அவனுக்குள்ள அனைத்து சட்டப் பூர்வ உரிமைகளும் நிறை வேற்றப்பட்டன.

இந்தநிலையில், கசாப் வழக்கை விசாரித்த மும்பை மாவட்ட_நீதிமன்றம் அவனுக்கு தூக்குதண்டனை விதித்தது (2010, மே 6). இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கசாப் மனுசெய்தான். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை உறுதிசெய்தது (2011, பிப்ரவரி 21). உச்ச நீதி மன்றத்திலும் இந்தத் தூக்குதண்டனை உறுதிசெய்யப்பட்டது (2012, ஆகஸ்ட் 29). கசாப் சார்பில் ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பப்பட்டது. அதை கடந்த நவம்பர் 8 ம் தேதி அவர் நிராகரித்தார். இவ்வாறாக, கசாப் வழக்கில் அனைத்து சட்டநடைமுறைகளும் பின்பற்றப் பட்டன. ஆயினும் கசாப் தூக்குதண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம் இருந்துவந்தது. 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குரு இன்னமும் தண்டனை பெறவில்லை. அதேபோன்ற நிலைதான் கசாப் விஷயத்திலும் அனுசரிக்கப்படும் என்றே பலரும்_எதிர்பார்த்தனர்.

இந்நிலையில்தான், கசாபுக்கு தூக்குதண்டனை ரகசியமாகவும், அவசர  அவசரமாகவும் எரவாடா சிறையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இப்போது பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு விட்டதாக நெஞ்சுநிமிர்த்துகிறது காங்கிரஸ். மும்பை குண்டு வெடிப்புகளுக்கும், 26/11 தாக்குதலுக்கும் காரணமான அதே காங்கிரஸ்தான் இப்போது வெற்றிமுழக்கம் செய்கிறது.

இவ்வழக்கை மஹாராஷ்டிரா அரசுதான் நடத்தியது கசாபுக்கு தண்டனை பெற்றுத்தந்த அரசு, கசாப் கும்பலுக்கு உள்ளூரில் உதவிய 'ஸ்லீப்பர் செல்' பிரமுகர்களை தப்பிக்கச்செய்துவிட்டது. இத்தகைய பயங்கரதாக்குதல் உள்ளூர் தீவிரவாதிகளின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்தவிஷயம். இவ்வழக்கிலும் பலர்கைதாகினர். ஆனால் மாநில அரசு திறம்பட வழக்கைநடத்தாததால் அவர்கள் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டு விட்டனர். இது குறித்து அரசுக்கு எந்த குற்றஉணர்வும் இல்லை. உண்மையில் காங்கிரஸ்கட்சி முஸ்லிம் வாக்கு வங்கிக்காக இந்தவழக்கில் பல ஓட்டைகளை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள் தப்ப உதவியிருக்கிறது.

அதேபோல நாடுகடந்த மறைமுகப்போர் குறித்து உலக அளவில் பிரசாரம்செய்து பாகிஸ்தானின் முக மூடியைக் கிழிக்கும் வாய்ப்பையும் மத்திய அரசு தவறவிட்டுவிட்டது. கசாபுடன் வந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தானி யர்கள் என்பது ஊர்ஜிதமான போதே, அந்நாட்டின் மீது இந்தியா படையெடுத்திருக்கலாம். இஸ்ரேல் அவ்வாறுதான் செய்கிறது. அமெரிக்கா ஆப்கன்மீது போர் தொடுத்ததும் அதனால்தான். அவ்வாறு செய்யா விட்டாலும் உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தவாய்ப்பை நமது அரசு பயன் படுத்தி இருக்கவேண்டும். எங்கே, நமது அரசுக்கு ஊழல்களில் திளைக்கவே நேரம்போதவில்லையே?
கசாப் கைதானபோதே அவனை 'என்கவுன்டர்' முறையில் கொன்றிருக்கமுடியும். ஆனால், நமது அரசு அவனை கைதுசெய்து, அவனுக்கு உரிய அனைத்து சட்டப் பூர்வமான வசதிகளையும் வழங்கி, அவனை ஒருவிருந்தாளி போலவே நடத்தியது. இதற்காக நாம் பெருமிதப் படலாம். இதற்காக நமது அரசுகள்செய்த செலவினம் ரூ. 29 கோடி! இவ்வளவும்செய்த நமது அரசுகள் அதை திறம்பட பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது.

கசாபை தூக்கிலிட்டதும் கூட மிகரகசியமாக செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்பது புரிய வில்லை. கசாபுக்கு தூக்கு நிறைவேற்றப் படுவதை உலக நாடுகள் எதிர்க்கவாய்ப்பில்லை. பாகிஸ்தானே, கசாபுக்கும் தங்களுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என கைவிரித்து விட்டது. மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புதெரிவிக்கும் என்ற அச்சம் காரணமாக இருக்கும் என கூறப்படுமானால், அதைவிட நகைப்புக்குரிய விஷயம் எதுவும் இருக்கமுடியாது. இந்திய அரசின் அச்சம், இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் மீதானது. கசாப்தண்டனை நிறை வேற்றத்தை இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பார்களோ எனும் அச்சத்தால்தான், இதை ரகசியமாக நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை கேவலப் படுத்துவதாகும்.

இங்குவாழும் அனைத்து இஸ்லாமியர்களும் வெறுப்புஅரசியலில் திளைப்பவர்கள் அல்ல. சிலபயங்கரவாத அமைப்புகள் அவர்களிடையே செயல்படுவது உண்மை தான். ஒருதுணிவுள்ள அரசு, அத்தகைய பயங்கர வாதிகளுக்கு படிப்பினை அளிக்கும்வகையில், இதே தண்டனையை ஒருகருத்தியல் பிரசாரமாகவே முன்னெடுத்திருக்கும். அவ்வாறு செய்யும்திராணி நமது மத்திய அரசுக்கு இல்லை. இந்தத்தண்டனையே உள்ளூர் நிர்பந்தம் காரணமாக, மகாராஷ்டிரா அரசின் முயற்சியால்தான் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அண்மையில் காலமான சிவசேனை தலைவர் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய 25 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தைப்பார்த்தவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் காரர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது புரிந்து விட்டது. அதுவும் கசாப் விரைவாக தூக்கிலிடப்பட ஒருகாரணம். இன்னொன்று நவ. 22 ல் துவங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அரசுக்கு தற்காப்புஉபாயங்கள் தேவைப்பட்டன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய_முதலீட்டுக்கு அனுமதி அளித்ததால் அரசுக்கு ஏற்பட்டசிக்கலை எதிர்கொள்ள கசாப்தண்டனை நிறைவேற்றம் உதவும் என காங்கிரஸ் கணக்குப்போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சாதாரணமாக எடைபோடமுடியாது.

2ஜி ஊழலை அம்பலப் படுத்திய சிஏஜி. வினோத் ராயையும், அரசுக்கு அடிக்கடி சங்கடம்கொடுக்கும் பொதுகணக்குக் குழு தலைவர் முரளிமனோகர் ஜோஷியையும் ஒரேநேரத்தில் வீழ்த்த என்னசெய்வது என்று சதித்திட்டம் தீட்டும் அபார மூளைகள் குயுக்தியுடன் செயல்படும்கட்சி காங்கிரஸ். 2ஜி மறு ஏலத்தையே அரசுக்கு சாதகமாகமாற்ற என்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யும்கட்சி 125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ். அந்த கட்சிக்கு எங்கு கல்லெறிந்தால் எங்கு பழம்விழும் என தெரியும். கசாப் விஷயத்தில் காங்கிரஸ் அற்புதமாக காய்நகர்த்தி இருக்கிறது. இதற்கு ஒரேபதிலடி அப்சல் குருவுக்கு எப்போது தண்டனை? என கேட்பதுதான். அதுவும் விரைவில் நிறைவேறு வதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. அரசியலுக்காக காங்கிரஸ் இயங்கினாலும், நாட்டு நலனை விரும்புவோர் அதற்கான நிர்பந்தங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பது அவசியம்.

கசாப்பின் உடலை அவரது குடும்பத்திடம் கொடுக்காமல் சிறைக்குள்ளேயே புதைத்ததை பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் அமைப்பு கண்டித்திருக்கிறது. கசாப் உடலை பாகிஸ்தானுக்கு அனுப்பா விட்டால் அங்குள்ள இந்தியர்களை கடத்திக்கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறது தலிபான். நமது அரசு இதை துணிவுடனும் விவேகத்துடனும் கையாண்டு முறியடிக்கவேண்டும். கசாப் மரணத்துக்கு பழி வாங்கும் வகையில், பாக் சிறையில் இருக்கும் அப்பாவி சரப்ஜிசிங்கின் உயிருக்கு உலை வைக்கப்படலாம் அதைத்தடுக்க வேண்டிய கடமையும் நமது அரசுக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி எந்த தந்திரத்தை கையாண்டாலும், கசாப்புக்கு தூக்கு நிறைவேற்றத்தில் லாபம்காண விரும்பினாலும், நாட்டு நலன் அடிப்படையில் அந்த கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அந்த கட்சியின் சுய ரூபத்தை பிரசாரமும்செய்வது அவசியம். அதே போன்று , கசாப் தூக்கில் இடப்பட்டதை கொண்டாடும் மன நிலையும் தேவையில்லை. இந்த அம்பை ஏவியவர்கள் எப்போது வெல்லப் படுகிறார்களோ, அப்போதுதான் உண்மையான கொண்டாட்டத்துக்கான தருணம்வாய்க்கும். இதை தேசபக்தர்கள் மறந்துவிடக்கூடாது.

நன்றி; சேக்கிழான்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...