சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என்று கூறிவந்த கருணாநிதி திடீரென்று தலைகுப்புற அந்தர்பல்டி அடித்தது ஆச்சரியத்தை தரவில்லை என்று பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என்று கூறிவந்த கருணாநிதி திடீர் என தலைகுப்புற அந்தர்பல்டி அடித்தது ஆச்சரியமி ல்லை. ஆனால் நான்கு கோடி பேரின் வேலை வாய்ப்பை பறிக்கும் காங்கிரஸ்சின் இந்த முடிவை ஆதரிக்கும் கருணாநிதியையும் திமுக. வையும் பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
கருணாநிதியின் அறிவிப்பில் இருந்து மூன்று உண்மைகள் தெளிவாகிறது.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஒத்துக் கொண்டதற்கும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று ஒத்துக்கொண்டதற்கும். பாஜக கருணாநிதியின் ஊழலை வெளிக் கொணர்ந்துவிடும் என்று அச்சப்பட்டதற்கும் பாஜக கருணாநிதிக்கும் திமுக,.வுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. சில்லறை வர்த்தகத்திற்கெதிரான எந்தமுடிவையும் பாஜக தொடர்ந்து எதிர்க்கும். கடைசிநேரத்தில் திமுக.வின் இந்த அந்தர்பல்டிக்கு காங்கிரஸ் என்ன விலை கொடுத்தது என்பதும் திரைமறைவில் என்ன விலை_பேசப்பட்டது என்பதும் மக்களுக்கு விரைவில் தெரிய வரும் என்று கருத்து தெரிவித்துள்ளார் .
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.