அடுத்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்தால் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் எஃப்.டி.ஐ அறிவிக்கை ரத்துசெய்யப்படும் என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அன்னியநேரடி முதலீடு தொடர்பாக பல் உத்திகளை பின்பற்றி நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு வெற்றிபெற்றது. இருப்பினும், இந்த பிரச்னையை அடுத்த பொதுத்தேர்தலில் மக்களிடம் எடுத்துச் செல்வோம். எஃப்.டி.ஐ தொடர்பானா இறுதிமுடிவை 120 கோடி மக்கள் அளிப்பர்.
2014 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு தந்தால் , இப்போது வெளியிடப்பட்டுள்ள எஃப்.டி.ஐ அறிவிக்கை ரத்துசெய்யப்படும். பிறகு , அன்னிய நேரடிமுதலீடு தொடர்பாக நாட்டில் இருக்கும் வணிகர்களிடம் விரிவாக ஆலோசிக்கப் பட்டு இந்த காலத்துக்கு ஏற்றவாறு புதிய கொள்கைகளுடன் அமல் படுத்தப்படும். சர்வதேச மற்றும் தேசிய தொழிலதிபர்களின் நிர்பந்தத்தால் தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.