பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மீண்டும் தாய்க்கட்சியான பாரதிய ஜனதாவில் இணைகிறார்.
கடந்த 1991-92 , 1997-99 கால கட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில்
உபி., முதல்வராக பதவிவகித்தவர் கல்யாண் சிங். பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கட்சியைவிட்டு விலகி பிறகு மீண்டும் கடந்த 2004ஆம் வருடம் பாஜக.,வில் சேர்ந்தார்.
2009ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் இருந்து பிரிந்த கல்யாண் சிங், கிராந்தி என புதியகட்சியை தொடங்கினார். இந்நிலையில் கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பாஜக. தலைவர் நிதின்கட்காரியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து தனது கிராந்தி கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க.வில் இணைய கல்யாண்சிங் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது . வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு உபி.,யில் நடைபெறும் விழாவில் கல்யாண்சிங், தனது தொண்டர்களுடன் பாஜக.வில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
உபி.,யில் இழந்த செல்வாக்கை திரும்பபெற கல்யாண் சிங்கின் வருகை உதவியாக இருக்கும் என்பதில் எந்த மற்று கருத்தும் இல்லை.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.