குஜராத் மாநில முதல்வராக 4வது முறையாக நரேந்திரமோடி இன்று பதவியேற்று கொண்டார். இன்று காலை அகமதாபாத்தில் இருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கடவுளின் பெயரால் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குஜராத் மாநில ஆளுநர் கமலா
பெனிவால் பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைத்தார்.
மொத்தம் 1 லட்சம்பேர் அமரும் வசதிகொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய்படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவை யொட்டி, மைதானத்தில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த விழாவில் பாஜக தலைவர் நிதின்கட்காரி, மூத்த தலைவர்களான அத்வானி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல், சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், வெங்கையாநாயுடு, வசுந்தரா ராஜேசிந்தியா, நவ்ஜோத்சிங், சித்து, அருண் ஷோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா , அகாலி தள தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல் மகாராஷ்டிரா நவநிர்மன்சேனா தலைவர் ராஜ்தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோடியுடன் 7 கேபினட் அமைச்சர்களும், 9 இணைஅமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில், இன்று தனது டுவிட்டரில் எதிர்கால_இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு , உறுதிப் பாட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.