பா.ஜ.க புதிய தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்

 பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து நிதின்கட்கரி விலகினார். புதியதலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்ப்போது பாஜக தலைவராக நிதின்கட்கரி உள்ளார். கட்சி தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில், தாம் தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை டில்லியில் பா.ஜ.க., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்கு முன், பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானியை சந்தித்த ராஜ்நாத்சிங், பின்னர் நிதின் கட்காரியுடன் எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் புதியதலைவர் தேர்வு குறித்து பேசினர். இறுதியாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்துதெரிவித்தார். மேலும், ராஜ்நாத் கட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் முதிர்ந்த அனுபவம் உள்ளவர் என்று பாராட்டு தெரிவித்தார். மேலும், பதவியில் இருந்து வெளியேறும் கட்காரிக்கு நன்றிதெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, புதிய தலைவருக்கான வேட்புமனுவை ராஜ்நாத்சிங் தேர்தல் அதிகாரியான கெலாவட்டிடம் தாக்கல்செய்தார். அவருடன், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜ்நாத்சிங்கை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதைதொடர்ந்து ராஜ்நாத்சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை பா.ஜ.க, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2005-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை பாஜக தலைவராகப் பதவி வகித்துள்ளார். இவர் ஏற்க்கனவே மத்திய அமைச்சராவும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...