விஸ்வரூபம் பாஜக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இனைந்து போராட்டம்

விஸ்வரூபம் பாஜக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இனைந்து  போராட்டம்  விஸ்வரூபம் படத்தைத் திரையிடவேண்டும் என கோரி திருவனந்தபுரத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த பாஜகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இனைந்து போராட்டம் நடத்தி வெற்றிபெற்றுள்ளனர் .

திருவனந்தபுரம் கைரளி திரை அரங்கில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. அரசு நிர்வாகம்சார்பில் இயங்கும் அந்தத் திரையரங்கில் படம்பார்க்க போனவர்களுக்கு அதிர்ச்சி. படத்தைத் திரையிடமுடியாது என திரையரங்கு மேலாளர் கூறியதால் பெரும்சலசலப்பு ஏற்பட்டது.

இதனை கேள்விப்பட்ட பா.ஜ.க.வினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து திரைப்படத்தை திரையிட வேண்டும் என கோஷம் எழுப்பிபோராடினர். மாநில அரசு தடைவிதிக்காத பட்சத்தில், திரையிடமாட்டோம் என அரசு சார்பு திரையரங்கம் கூறுவது கண்டிக்க தக்கது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் பலத்த சர்ச்சைகளுக்கும் கூச்சல் குழப்பங்களுக்கும் மத்தியில் படம் திரையிடப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.