ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை கணவர் அனில்குமார், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சி.பி.ஐ போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரது தங்கை சர்மிளாவின் கணவர் அனில்குமார் மீது பாஜக.,வை சேர்ந்த பிரபாகர் ஊழல் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:
சர்மிளாவுக்கு திருமணத்திற்கு முன் குறைவான சொத்துக்களே இருந்தது. தற்போது அவர் 7 கம்பெனிகளுக்கு இயக்குனராக உள்ளார். குறுகிய காலத்திலேயே இவ்வளவு சொத்து எப்படி வந்தது . அவரது கணவர் ஒரு மதபோதகர் . அவர் மதபோதகராக இருந்து வியாபாரிபோல் செயல்பட்டுள்ளார். மதம் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து 1000 கோடிக்குமேல் பணம் சம்பாதித்துள்ளார் என்று குற்றம் சாட்டினர்.
எனவே ஜெகன்மோகன்ரெட்டி சொத்துகுவிப்பு வழக்குடன் இவர்கள் மீதான சொத்துக்கள் பற்றியும் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக உள்ளேன் என்று அவர் கூறினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.